பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 83 _- - "இப்ப போனா, பூவும் பொட்டோடும் போவேன். எந்தத் தீட்டும் இல்லாமல் ஆசாரமாப் போவேன். சித்திரபுத்திரா, என் கணக்கை முடித்துவிடேன்' என்று என்னுடைய பாட்டி ஆற்றாமையால் அங்கலாய்ப்பார். நான் சிலையாக இருப்பேன். நாங்கள் காஞ்சிபுரத்தில் குடியிருந்த ஆட்டிற்கு அருகில், எதிர் வாடையில் கோயில் கொண்டிருந்த சித்திரபுரத்திரனும் என்னைப் போலவே சும்மா இருந்தார். பாட்டியும் மேலும் பல்லாண்டு உயிரோடு இருந்தார். பிறகு பூவும் பொட்டும் இல்லாமல் போனார். நான் தொடக்கத்தில் எங்கள் சாதியார், பார்ப்பனர்கள் ஆகியோர் வீட்டுப் பலகாரங்கள் கிடைக்கும்போது மட்டும் உண்பேன். மற்றவர்கள் கைப்பட்ட தின்பண்டங்கள் தீண்டத்தகாதவை என்று என் மூத்தோர் சொன்ன சொல்லை அப்படியே நம்பினேன். சிலர் வீட்டுப் பண்டங்களை உண்ணக்கூடாது என்னும் மரபை யாரும் வெளிப்படையாக எதிர்ககாத காலம் அது. ஆனால் சத்திரத்து அய்யர் கொடுத்த பயங்கர அதிர்ச்சி, என்னை அடியோடு மாற்றிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சைவ உணவா என்பதை மட்டுமே கவனிப்பேன். யார் வீட்டது என்பதைப் பொருட்படுத்துவதே இல்லை. கண்டவர்கள் வீட்டு, வடையும் முறுக்கும் தோசையும் இட்லியும் சாப்பிடத் தொடங்கினேன். ஆனால் விளம்பரப் படுத்திக்கொள்ள வில்லை. எத்தனையோ திங்கள் இது என் பாட்டிக்குத் தெரியாமல் இருந்தது. ஒருமுறை எப்படியோ அவர் காதுக்கு எட்டிவிட்டது. என்னை நேருக்கு நேர் நிறுத்திக் கேட்டார். "ஆம்" என்று ஒப்புக் கொண்டேன். அவர் பட்ட வேதனை புலனாயிற்று. அவரிடம் எனக்கு ஆசை அதிகம். அதற்காகவும் என் போக்கை மாற்றிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. நட்புச் செல்வம் பெருகியது மீண்டும் சாதி க்காரனாக மாற முயலவே இல்லை. பாட்டி எங்கினார்கள், கெஞ்சினார்கள்; சிலவேளை சபித்தார்கள். பலன் இல்லை. நான் பிடிவாதத்தால் அப்படி நடந்துகொண்டேனா இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/125&oldid=786868" இலிருந்து மீள்விக்கப்பட்டது