பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் எனக்குக் கொடுக்கும் ஆதரவு பெரிது. அவர்கள் அனைவருக்கும் நன்றி

அவ்வாதரவால் நான் நற்பணியாற்ற முடிந்தது. அது எனக்குச் சோவியத் நாடு நேரு விருதினைப் பெற்றுத்தந்தது.

என் வாழ்க்கைத் துணைவியாக விளங்கும் காந்தம்மா என்னிலும் அதிகம் கல்வித் தகுதி பெற்றவர். எனினும், பதவிகளைத் தேடாமல், எனக்கு வாழ்க்கைத் துணைவியாக வாழ்வதையே, எல்லாமாகக் கருதுகிறார். எரிச்சல் கொண்டிருந்த என் சுற்றத்தாரை தமது பொறுமையால், இன்சொலால், எனக்கு வேண்டியவர்களாக்கிவிட்டார். எனக்கு வரும் சுமைகளைத் தாமும் தாங்குகிறார்; தொல்லைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறார். சுருங்கக்கூறின், என் காரியம் யாவினும் கைகொடுத்து வருகிறார். என்னோடு சேர்ந்து. ஊர் ஊராக அலைந்து, பகல் உணவுத் திட்டத்தை ஊக்குவித்தார். மனையறங்காக்கும் காந்தம்மாவின்துணையே. என் வெற்றி வாழ்க்கையின் வித்தாகும்.

'பங்காளி'களாகச் செயல்படாமல், என் நிழலென இயங்கிவரும் என் தம்பியர் சிவானந்தம், நடராசன், திருநாவுக்கரசு ஆகிய மூவரும், எனக்கு இனியர்.

மிக இளம் வயதில், பொதுக்கல்வி இயக்குநரான நான், வெற்றிகரமாகச் செயல்பட பல்லாயிரக் கணக்கான சாதாரணப் பொது மக்கள் முதல், ஆட்சிப் பொறுப்புகளில் விளங்கிய விளங்கும் பெரியோர்கள் வரை ஆற்றிய உதவிகளை நன்றியுடன் உலகறியச் செய்வதே நினைவு அலைகளின் நோக்கமாகும். என்னைப் பற்றி மட்டும் எழுதுவதாயின் இருநூறு பக்கங்களில் முடித்திருக்கலாம். என்னுடைய காலத்து அரசியல், சமூகவியல், பொருளியல் ஆகியவற்றைக் காட்ட எழுதப்படுவதால் நினைவு அலைகள் விரிந்து வளர்ந்து விட்டது.

'பிள்ளை இல்லாத என்னுடைய மணிவிழ ாவினை 12-10-1972 அன்று சென்னையில் தந்தை பெரியார் எடுத்துப் பெருமைப் படுத்தினார். அது முதல் என் வரலாற்றை எழுதும்படி சத்ய கங்கை'யின் ஆசிரியரும் என் கெழுதகை நண்பருமான திரு.பரேதன் நச்சரித்து வந்தார். நான் ந. விக்கொண்டே இருந்தேன்.

சமுதாயம் உங்களுக்கு அளித்த பட்டறிவை உங்கள் குடும்பச் சொத்தாக்கி விடலாமா அதைச் சமுதாயத்திற்குத் திருப்பி ஒப்படைக்க வேண்டாமா என்று ஒரு முறை கேட்டது என்னைச் சிந்திக்க வைத்தது. 1977 சனவரியில் கும்பகோனம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட. 'தீ விபத்து அதிர்ச்சி செயல்பட வைத்தது. 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல். சத்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/13&oldid=1205213" இலிருந்து மீள்விக்கப்பட்டது