பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு B9 பள்ளிப் படிப்பு முடிந்ததும் தங்கவேலு, தாமே தொழில் செய்து வாழும் பொருட்டுச் சென்னை சூளைப்பகுதிக்குச் சென்று விட்டார். கிருஷ்ணசாமி என்ன ஆனார்? தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். குற்றங்காண முடியாதபடி, நற்பணி ஆற்றி ஒய்வு பெற்றார். எங்கள் இளமைக்காலம் வாய்ப்புகள் வறண்டு இருந்த காலம். பள்ளிப்படிப்போ, எங்கோ நெடுந்துரம் தேடிச் செல்ல வேண்டிய, சில குட்டைகளில் மட்டுமே இருந்தது; ஊர்தோறும் சென்று பாயும் நீரோடையாக அது இல்லை. கல்லூரிப் படிப்போ எட்டாத வெகுதொலைவில் இருந்தது. எவரோ ஒருவரே சமாளிக்கக் கூடிய செலவு மிகுந்ததாக இருந்தது; ஆகவே சிலர் கல்லூரிக் கல்வியை நாடவில்லை. கா. கதிர்வேலும் பள்ளி இறுதியோடு படிப்பை நிறுத்திக் கொண்டார். ஆசிரியப் பயிற்சி பெற்றார். செங்கற்பட்டு மாவட்ட ஆணைக்குழுவில் ஆசிரியராகச் சேர்ந்தார். சில உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். உடன் பணி புரிந்தவர்களின் மதிப்பிற்குரியவராக விளங்கினார். நேர்மைக்கும் நாணயத்திற்கும் தி ட LD உணர்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். முற்போக்கான கொள்கைகள், அளந்து பேசுதல், கொள்கையில் நழுவாமை, உள்ள உறுதி இவருடைய தனி இயல்புகள். திருநாவுக்கரசு என்ன ஆனார்? கா. தே. தி. அரசு என்னும் பெயரில் சென்னையில், சில ஆண்டுகள், திராவிடக் கழக முன்னணியாளர்களில் ஒருவராக விளங்கினார். தந்தை பெரியாருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவராக ஒளிவிட்டார். பின்னர் அண்ணாவுக்கு நெருக்கமானவர். எனக்கு வேண்டிய இவரும் இல்லை. முன்னர் குறிப்பிட்ட அனைவரும் எனக்கு நெருக்கமானவர்கள். ஆயினும் சிறியவனாக இருந்த நான், அவர்கள் வீடுகளுக்குச் சென்றதில்லை. மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஆயினும் இராமசாமி வீட்டிற்கு விடுமுறை நாள்களில் செல்வேன். சிலவேளை அவர் வீட்டுத் திண்ணையில் இருவரும் சேர்ந்து பாடங்களைப் படிப்போம். அவர் வீடு சிறிய வீடு; தனிக்குடித்தனம். சிலவேளை, அவர்கள் வீட்டில் தின்பண்டங்கள் கிடைக்கும். இருவருமே திண்ணைமேலிருந்து தின்போம். வீட்டுக்குள் அழைத்துக் கொடுக்காதது குற்றமாகத் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/131&oldid=786875" இலிருந்து மீள்விக்கப்பட்டது