பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நினைவு அலைகள் மேல் வகுப்புகளுக்கு வந்த பிறகு, என்னை அறியாமலே என் சிந்தனை மாறிவிட்டது. கூடியவரையில் வெளி இடங்களில் தின்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன். எதற்கும் விலக்கு உண்டு. நானே ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடும் ஓரிடத்தில் தளர்ந்தது. எங்கே? என் நண்பர் வி.கே. இராஜகோபாலன் வீட்டில். ஏன்? வி.கே. இராஜகோபாலனின் தந்தையார் சென்னை மாநிலக் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக இருந்தவர். நான் இராஜகோபால னோடு நண்பராகும் நிலையில் அவர்தன் அருமைத் தந்தையை இழந்து இருந்தார். விதவைத் தாய் இவரையும் இவருடைய அண்ணன்கள் இரு வரையும் பொறுப்புடன் பராமரித்து, மிகுந்த கவனத்துடன் படிக்கவும் வைத்துக் கொண்டு இருந்தார். இராஜகோபால் சூட்டிகையானவர். கலகலவென்று பேசுவார். அதனால், இவரை எனக்கு அதிகம் பிடித்தது. இராஜகோபாலன் வீடு, எங்கள் வீட்டிற்குத் தொலைவில் இருந்தது. சின்ன காஞ்சிபுரம் யதோத்காரி தெருவில் குடியிருந்தார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்குச் செல்வேன். அவரோடு சேர்ந்து படிப்பதும் உண்டு. இராஜகோபாலனின் தாயார் விருந்தோம்புவதில் மிகச் சிறந்தவர். முதன்முறை நான் சென்றபோதே அதைக் கண்டவன். இராஜகோபால் என்னைத் தம்முடைய தாயாருக்கு அறிமுகப் படுத்தினார். என்னைப் பற்றி முன்னரே சொல்லியிருந்தாராம். ஒன்றாகப் படித்தோம்; ஒன்றாக எதை எதையோ பேசி மகிழ்ந்தோம். வீடு திரும்புவதற்கு எழுந்தேன். 'எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய்! எவ்வளவு தூரம் போகணும் ஒன்றும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் எப்படிப் போவது? 'உங்க வீட்டிற்கு வேண்டியவர்கள் வந்தால், சும்மா அனுப்பு வீர்களா? உன் கூட்டாளியோடு கொஞ்சம் சாப்பிட்டு விட்டுப் போ' என்று அன்புடன் ஆணையிட்டார்கள். என் சிந்தனை சிறகடித்தது. அது சரி இந்த வயதுப் பையன்களைத் திண்ணையில் வைத்துச் சாப்பாடு போடமாட்டார்கள். ஆயினும் நடையில் வைத்துப் போட்டாலும் இழிவுதானே. ஒரு வாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/132&oldid=786876" இலிருந்து மீள்விக்கப்பட்டது