பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 91 சோற்றுக்காகவா அந்த இழிவைப் பொறுத்துக் கொள்ள என்று குழம்பினேன். 'வடிவேலு வா, கூடத்தில் பரிமாறியுள்ள சாப்பாடு ஆறிப்போகும். ஒருவாய் சாப்பிடு, என்ன பிரமாதம்?' என்று கனிவோடு கூப்பிட்டார்கள். அந்த அன்னையின் அன்புக் கட்டளையை மீற மனம் இல்லை. இராஜகோபாலனும் நானும் கைகளைக் கழுவிக்கொண்டோம்: கூடத்திற்குச் சென்றோம்; மணைகளில் அமர்ந்தோம். முன்னே வாழை இலைகள், அவற்றில் புளியோதரை, ததியோனம் பரிமாயிருப்பதைக் கண்டோம். உண்ணத் தொடங்கினோம். என்ன அருமையான சுவை! நல்ல மனநிலையில் இருந்திருந்தால், அதை ஒரு கைபார்த்திருப்பேன். அன்றோ? சாப்பிட உட்கார்ந்த பிறகும் மனத்துக்குள் ஒரு தவிப்பு, ஏக்கம், ஏன்? 'சாப்பிட்ட பிறகு நான்தானே இலையை எடுத்துக் கொண்டுபோய்த் தெருவில் எறிந்துவிட்டு வரவேண்டும்? இதுவரையில் இந்த வேலை செய்ததில்லையே? பையன் அதைச் செய்வது குறைவு என்றல்லவா வீட்டில் எல்லோரும் சொல்லிவைத்திருக்கிறார்கள்! வயிற்றுச் சோற்றுக்காக இழிவான வேலையைச் செய்வதா? 'நான் சாப்பிட்ட இலையை எடுக்க, இங்கே வேலைக்காரியைக் காணோம். இப்படியே எச்சில் இலையை மாலை வரை விட்டு வைக்க எப்படி ஒப்புக் கொள்வார்கள் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஏங்கினேன். அமுதமாயிருந்த அன்னம் தொண்டைக்குள் போவதே துன்பமாயி ருந்தது. எப்படியோ உண்டு முடித்தேன். எனக்கு முன்பே இராஜ கோபால் முடித்துவிட்டார். அதைக் கண்டதும், அவருடைய தாயார், 'கோபால் எழுந்திருக்காதே! உன் கூட்டாளி சாப்பிட்டு முடித்ததும் அவன் இலையையும் நீயே எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டுவிடு' என்று கட்டளையிட்டார். 'என் எச்சில் இலையை நண்பர் இராஜகோபால் எடுக்கலாமென்றால் நானே எடுப்பதில் இழிவு இல்லை என்பது பளிச்சென்று தெரிந்தது. உணவை முடித்ததும் என் இலையை நானே எடுத்தேன். வடிவேலு இது உங்க வீடுபோல, உங்கள் வீட்டில் நீ சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டாய். அதனால் இங்கும் நீ எடுக்கக்கூடாது. 'வீட்டில் உன் அம்மா எடுப்பாள். இங்கே நான் எடுப்பதே முறை. ஆனாலும் எங்கள் தெருவார் பொறித்துக் கொட்டி விடுவார்கள். ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/133&oldid=786877" இலிருந்து மீள்விக்கப்பட்டது