பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவு அலைகள் வாயில் படும் நிலையில் நான் இல்லை. இராஜகோபாலை உன் தம்பியாக நினைத்துக் கொள். அவனே உன் இலையையும் எடுக்கட்டும்' என்று இராஜகோபாலின் அன்னையார் வற்புறுத்தினார். சோம்பேறியாகிய நானும் ஒப்புக் கொண்டேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாயிருக்கிறது. அவரவர் வேலையை அவரவரே செய்து கொள்வதில் இழிவு இல்லை; பிறருக்குச் சுமையாக இருப்பதே பழி. பிந்தியதற்கே வெட்கப்படவேண்டும். இவற்றை உணராத சிறுபிள்ளைத்தனத்தால், நண்பர், நான் உண்ட இலையை எடுத்தெறிய ஒப்புக் கொண்டேன். அதுவே பழக்கமாகிவிட்டது. இராஜகோபால் வீட்டில் நான் உண்டபோது எல்லாம், என் எச்சில் இலையையும் என்னுடைய நண்பர் இராஜகோபாலே எடுத்து வந்தார். நான் கல்லூரி மாணவனானபோது இக்குடும்பம் சென்னையில் குடியேறிவிட்டது. இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை இவர்கள் வீட்டுக்குச் செல்வேன்: உண்பேன்; என் இலையை எடுக்க விடமாட்டார்கள். இராஜகோபாலனின் அன்னையார் உயிரோடிருந்த காலமெல்லாம் இப்படி நடந்தது. அப்புறம் நான் நாடோடியாகி விட்டேன். இக்குடும்பத்தை நினைத்தால் புல்லரிக்கிறது. இராஜகோபாலனின் அண்ணன்கள் இருவரும் வெளிநாட்டு மண்ணெண்ணெய்க் கம்பெனிகளில் அலுவலர்களானார்கள். பெரும் பதவிகளுக்கு நல்ல ஊதியத்துடன் உயர்ந்தார்கள். இராஜகோபால் பள்ளி இறுதித் தேர்வுக்குப்பின் அச்சுத் தொழிலில் பயிற்சி பெற்றார். சென்னை அரசு அச்சகத்தில் பணிபுரிந்தார். பின்னர், இந்து நாளிதழ் அச்சகத்திற்கு மாறினார். அங்கு அமைதியாகப் பணிபுரிந்த பின்னர் உரிய காலத்தில் ஒய்வு பெற்றார். இந்திய சமுதாயம் வளமானதாக இருந்திருக்குமேயானால் இவரைப் போன்ற நல்லவர்கள் தொழில் மேதைகளாக உதவியிருக்கும். நம் நோயாளி சமுதாயத்தில், 'இருப்பவனுக்குத்தானே மேலும் மேலும் வாய்ப்புகள்: இல்லாதவர்களுக்கு ஒடுக்கந்தானே, காத்திருக்கிறது. ஏழ்மையின் கோர தாண்டவம் என்னோடு படித்து, பலவகையாக வளர்ந்த நண்பர்களைப் பற்றிச் சொன்னேன். ஒரே ஒரு நண்பரை நினைக்கும்போது இன்னும் கண்ணிர் பொங்குகிறது; வெந்நீராகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/134&oldid=786878" இலிருந்து மீள்விக்கப்பட்டது