பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 95 கொடிய ஏழ்மையே! நீ பறித்துப் பறித்து விழுங்கும் பள்ளிக் குருத்துகளுக்குத்தான் கணக்குண்டா? உனக்கோ பசி அடங்கப் போவதில்லை. இந்த இரக்கமற்ற சமுதாயத்திற்காவது புத்தி வரவேண்டாமா? வறுமை தனியார் சிக்கல் அல்ல. சமுதாய நோய் சமுதாய அமைப்பில் உள்ளதவறு; பெருந்தவறு: சமுதாயம் முழுவதும் சேர்ந்து விரட்ட வேண்டிய கொடிய நோய்; ஒத்தடங்கள், தூக்க மாத்திரைகள் பலிக்காது. வறுமையை வேரடி மண்ணோடு களைந்து எறியும் துணிவு கொள்ள வேண்டாமா? அப்படித் துணிவு கொண்டால் அந்த வேளையே, ஏழ்மைக்குச் சிரங்கு காணும்; ஏழ்மைக்குச் சன்னி பிறக்கும் கோடி கோடி முருகேசன்களை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் இல்லாமை நோய் இனி இல்லாமல் ஒழியும். ‘எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் என்று பாரதி பாடியதை உள்ளத்தில் கொள்வோம். 10. வரலாறும் வளர்ச்சியும் திரு அருட்பா செய்த புரட்சி தானே நேரடியாகப் பெறும் பட்டறிவு ஒருவரை ஆளாக்க உதவும். குடும்பச் சூழலையும் அதன் சிந்தனைப் போக்கையும் வளர்க்கவும் உதவக்கூடும்; தேய்க்கவும் உதவக்கூடும். தனித்தனிக் குடும்பங்களின் சிந்தனைப் போக்கு எதனால் உருவாகின்றது? வழி வழி வந்த போக்கால் ஆற்றுப்படுகிறது. நடுவில் சேரும் கருத்தோடைகளும் கருத்தாறுகளும் சிந்தனைப் போக்குகளை மாற்றுவதுண்டு. முழங்காதபடி செய்துவிட்ட கருத்துகளும் வீண் போவதில்லை. அவற்றின் வேலையை நுண்மையாகச் செய்து முடித்து விடுகிறது. வள்ளலாரைப் பற்றி இன்று பலரும் பேசக் கேட்கிறோம். அடிகளார் பல இடங்களிலும் பேசப்படுகிறார். அவர் தூல உடலோடு நடமாடிய காலத்தில் அவரைப் படாதபாடு படுத்திற்று சமுதாயத்தின் பழமைப் பற்று. சென்ற நூற்றாண்டில் தோன்றிப் புலமை பெற்று, துறவு உள்ளம் பெற்று, உயிரிரக்கப் பெருஞ்சுரடாக விளங்கினார் இராமலிங்க அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/137&oldid=786882" இலிருந்து மீள்விக்கப்பட்டது