பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நினைவு அலைகள் கந்தகோட்டப் பெருமானையும் தணிகைநாதனையும் ஒற்றி யூரனையும் தில்லை நடராஜனையும் பாடியபோது பொறுத்துக் கொண்டது பழைய மரபு. அடிகளார் ஆறாந் திருமுறையைப் பாடிய காலை அதைச் சமுதாயத்தால் பொறுக்க முடியவில்லை. சாதி ஏற்றத் தாழ்வு உணர்வில், பல தலைமுறைகளாக உழன்று ஊறிப்போன நம் சமுதாய மக்கள். 'சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!" என்று 'புனிதகுலம் பெறுமாறு புகலல் (5566) பகுதியில் வள்ளலார் பாடியதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்திருப்பார்கள். பழமையை உடும்புபோல் பற்றியுள்ள மக்களுக்கு அடியாரின் 'சாதிசமயங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே! எனும் அனுபவ மாலை"யும், (5805) 'இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு என்னும் திருவருட் பெருமை"யும் (4654) வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்திருக்கும். சாதி வேலிகளைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்து வரும் சமுதாயம், அடியாரின் 'நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே' என்னும் அருள் விளக்க மாலையோ, (4174) "எங்குலம் எம்மினம் என்பதொண் ணுற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ் சோதி' என்னும் அருட்பெருஞ் சோதி அகவலையோ (அடி 219,220) செரிக்க முடியுமா? முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/138&oldid=786883" இலிருந்து மீள்விக்கப்பட்டது