பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 * நினைவு அலைகள் அவர் உரிய காலத்தே இல்லறம் மேற்கொண்டார். அந்தியத்தில் துறவறம் மேற்கொண்டு, 'நல்சாமியார் என்ற பெயரில் வாழ்ந்தார். அவரோடு என் தந்தை நெருங்கிப் பழகியவர். நல்சாமியார், வள்ளலாரிடமிருந்து சாதி, சமயச் சழக்கு தவிர்த்தலைக் கற்றுக் கொண்டவர். == 'சாதிவேற்றுமை தீங்கானது' என்று என் தந்தைக்குச் சொல்லிக் கொடுத்தார். அது அவருடைய சாதி நினைப்பை மறக்கச் செய்தது. சாதிகளை எதிர்த்து முழங்காவிட்டாலும் சாதிகளைக் காப்பதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. அக்கால நாட்டுநடப்பு சாதியுணர்வை மேலும் மறக்கத் துணையாயிற்று. இந்திய மன்னர்களின் ஒற்றுமை இன்மையும் ஆங்கில அரசின் உதயமும் முற்கால இந்திய மன்னர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அளிப்பதில் செலவிட்ட சிந்தனையை, நேரத்தை, பொருளைவிட, பக்கத்து நாட்டின்மேல் படையெடுத்து, முடிந்தால் முழுமையும் முடியாதபோது பகுதியையும் பறித்துக் கொள்வதிலேயே நாட்டம் செலுத்தி வந்தார்கள். == மொழிப் பற்றோ, இனப்பற்றோ நாடு பிடிக்கும் தீமைக்குத் தடைகளாக அமையவில்லை. பண்டைக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் யார்? தமிழர்களே. அவர்கள் தாய்மொழி எது? தமிழே! ஆயினும் அவர்களிடையே ஓயாத சண்டை; அடுத்தடுத்துப் போரிட்டு நவிந்தார்கள்; மக்களைச் சாகடித்தார்கள். பாண்டியன் புகழ் அதிகமானால் சேரனும் சோழனும் கூட்டுச் சேர்ந்து, பாண்டியனைத் தோற்கடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். சேரனுடைய புகழ் பரவியதும், பாண்டியனும் சோழனும் சேர்ந்து சதி செய்தார்கள். சேரனைத் தாக்கித் தோற்கடித்தார்கள். உடன்பிறப்புகளுக்கிடையே நிகழ்ந்த போர்கள், இந்திய அரசுகளை வலுவற்றதாக்கிற்று; ஒற்றுமை ஒடிந்த, காழ்ப்பு மிகுந்த கபோதிக் கூட்டமாக்கிற்று. சில நூறு மன்னர்கள் பங்கு போட்டுக்கொண்டு இந்தியாவை ஆண்டதால் அன்னியர்கள் எளிதில் நம் நாட்டுக்குள் புக முடிந்தது. சோப்பும் சீப்பும் விற்க வந்த ஆங்கிலேயரிடம் இந்திய மன்னர்கள் மாறி மாறித் தஞ்சமடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/140&oldid=786887" இலிருந்து மீள்விக்கப்பட்டது