பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 நினைவு அலைகள் அக்காலத்தில், அரசியல் கட்சி வீறாப்பு முற்றி இல்லை. பல வேளை, செய்திகளை மதிப்பிடும்போது, காரசாரமான பேச்சு இடம் பெறாது. பட்டிமன்றம், பொழுதுபோக்குப் போலவே, பெரும்பாலும் அமையும். மூன்று நான்கு பெரியவர்கள் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, ஒரு வாரத்தின் சுதேசமித்திரனையும் திராவிடனையும் படித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகள், போட்டி உரையாடலுக்குப் பொருட்டாயின. வெளியான செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு, பாராட்டினார் ஒருவர். அதை ஆதரித்தார் என் தந்தையார். மற்றொருவர், 'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும். 'இந்தப் புதுப்போக்குகள் கேட்பதற்கும் படிப்பதற்குமே நன்றாயிருக்கும். நடைமுறைக்குச் சரியாக வராது. எங்கோ நடந்தால், இங்கிருந்து புகழ்ந்து கொண்டிருக்கலாம். நம் ஊருக்கு வந்துவிட்டால் தெரியும்; அது எவ்வளவு கெடுதி என்று. 'நாலு பேர் அறிய இதைப் படிக்காதீர்கள்; பரப்பாதீர்கள்; வீண் தொல்லையை விலைக்கு வாங்குவானேன். காலம் காலமாக வரும் பழக்கங்கள் நம்ம பெரியவர்கள் வகுத்ததாயிற்றே! அவர்கள், தெரியாமலா, எது எங்கே நிற்கணும் என்று முறைப்படுத்தி. இருக்கிறார்கள். 'வெள்ளைக்காரனோடே சண்டைபோட நிறையப் பேர் வேண்டுமென்பதற்காக, யார் யாரையோ சேர்த்துக்கொள்ள முடியுமா? சேர்த்துத் தொலைத்தாலும், வெளியே பொதுக்கூட்டத்தோடு நிறுத்திவிட்டு வரவேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது' என்று ஒரு பெரியவர், பழமைக்காக வாதாடினார். அவர் சொல்லில் கடுமையில்லை. ஆயினும் குரலில் முகத்தில் வெகுளி பளிச்சிட்டது. கடைசியில் அது ஒரு அறைகூவலில் முடிந்தது. அது என்ன அறைகூவல்? விநாச காலே விபரீத புத்தி நெய்யாடு பாக்கத்தில் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அரட்டையடித்தது, அறைகூவலாக உருவெடுத்தது. அது எட படி? அங்கிருந்தவர்களில் ஒருவர். 'நம் இந்திய மன்னர்கள் காட்டரசர்கள் போல இவர்கள் இட்டதே சட்டம். இவர்களை, ஏன் என்று கேட்க யாரும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/144&oldid=786896" இலிருந்து மீள்விக்கப்பட்டது