பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 105 'அப்படியென்றால் நாம் என்ன என்ன செய்யவேண்டும், எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகி றேன். ஆவது அறிவார்.அறிவுடையார்! அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றைச் சமாளிக்க ஆயத்தமாகி விடுவதே அறிவு. 'பிள்ளை, காளையாவது உறுதி. இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கற்கவேண்டியவற்றைக் கற்பதற்கு ஏற்பாடு செய்வதே அறிவோடு கூடிய செயல். - 'அப்போதைக்கப்போதே சொல்லி வைத்தேன்' என்பார்கள். அதைப் போல் காளையானதும் திருமணம் தேவை; அதற்கேற்ற பெண் இங்கிருக்கிறாளா, அங்கிருக்கிறாளா என்று முன்னதாகவே, காதும் காதும் வைத்ததுபோல், கேட்டறிந்து வைத்திருத்தல் உதவி....' துரைசாமியின் பேச்சில் குறுக்கிட்டார், மன்றத்தார் ஒருவர். "என்னப்பா, எங்கேயோபோய்க் கொண்டிருக்கிறாய்! நம் தெருவில் ஆதிதிராவிடர்கள் நடக்கலாமா? கூடாதா? நேரான கேள்வி. நேராபதில் சொல்லிவிடு' என்று மடக்கினார் அந்த நண்பர். 'வள்ளுவராக இருந்தால் சுருக்கமாகச் சொல்லத் தெரியும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கேள்விக்குப் பதிலை, நாம் எல்லோரும் சேர்ந்து கண்டுபிடிப்போம். 'வந்தபின் பதைப்பதற்குப் பதில் வருமுன் காப்பது நல்லது. என்ன வரும்? யானைவரும் பின்னே; மணியோசை வரும் முன்னே. 'மழை வரும் பின்னே; மின்னல் வரும் முன்னே; இடியும் வரும் முன்னே. 'இடியும் மின்னலும் ஆறேழு ஆண்டுகளாக நம்முன் நிற்கின்றன. மழை கொட்டும் வரை, மணல் மேட்டிலேயே கிடக்கப் போகிறோமா? 'ஆதி திராவிடர்கள் திரண்டு வந்து, மிரட்டும்வரையில் ஏன் காத்திருக்கணும் நாமே பார்த்து, அழைத்து, துணையாக நின்று உதவுவோம். அப்படிச் செய்தால், பழையபடியே நம் பிள்ளைகாலத் திலும் அண்ணன் தம்பிகளைப்போல ஒற்றுமையாக இருப்பார்கள்...' மீண்டும் பேச்சு இடை மறிக்கப்பட்டது. 'என்னப்பா பெரிதாக மிரட்டுகிறாயே. ஆறேழு ஆண்டுகளாக இடிக்குதாம்: மின்னுதாம்! இத்தனைகாலமாக அது என்ன இடி, மழை? ஆதிதிராவிடர்கள் திரண்டு வந்து விடுவார்களாம். வந்துவிடுவார்களா? 'நம் தெருவே நடந்தால் அவர்களுக்குச் சோறு வந்து டுமா? சோற்றுக்கு இல்லாத பயல்கள் நம்மை எதிர்ப்பான்கள் என்று நடுங்குகிறாயே. வெளியே காட்டாதே உன் நடுக்கத்தை' என்று முத்தாய்ப்பு வைத்தார் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/147&oldid=786899" இலிருந்து மீள்விக்கப்பட்டது