பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 107 'பிட்டி தியாகராய செட்டியார் பட்டம் பெற்ற மாதிரி, டாக்டர் டி.எம். நாயர் பட்டம் பெற்றது மாதிரி, டாக்டர் சி. நடேச முதலியார் பட்டம் பெற்றது மாதிரி, ஏ. இராமசாமி முதலியார் மாதிரி, ஏன், நம்ம செய்யூர் முத்தய்ய முதலியார், மண்ணுார் கிருஷ்ணசாமி ரெட்டியார் பட்டம் பெற்றது மாதிரி ஆதிதிராவிட இளைஞர்களும் பெறலாம் என்று அந்தக் கூட்டத்தில் பேசினார்களாம்" என்றார் என் தந்தை. 'பேச்சுத்தானே. குடிப்பதை விட்டுவிட்டு, பணத்தை மீத்து வைத்துப் படிக்க வைக்கட்டும், அப்புறம் பேசலாம்' என்றார் ஒருவர். என் தந்தை பேச்சைத் தொடர்ந்தார். 'நீண்ட காலமாக ஆதிதிராவிடர்களை அழுத்தி வைத்திருந்தோம்; அழுத்தி வருகிறோம். இப்ப அவர்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது. 'திராவிடனில் வந்ததைச் சொல்லுகிறேன். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காகப் 'பறையன்' என்னும் பெயரில் பத்திரிகையைத் தொடங்கி விட்டார்கள். அதன் வழியாக விழிப்பை உண்டாக்கினார்கள். 'அதனால், நமக்கு அருகில் இருக்கும் மலையாங் குளத்தில், ஆதிதிராவிடர்களுக்குத்தான் ஆரம்பப் பள்ளிக்கூடம் திறக்க முதலில் உத்தரவு ஆயிற்று. 'அதைப் பார்த்துப் பதறிப்போய், சாதி இந்துக்களுக்கும் பள்ளிக்கூடம் வேண்டும் என்று அந்த ஊரார் பின்னால்தான் கேட்கத் தொடங்கினார்கள். ‘'எது எப்படியானாலும் ஆண், பெண் இரண்டு சாதியைத் தவிர வேறு சாதி இல்லை என்பதே சரி. தாழ்த்தப்பட்டோர் இழந்த மனிதத் தன்மைக்காக, போராட, வரிந்து கட்டுவதற்கு முன், நாமே அதிலுள்ள நீதியை உணர்ந்து, பாதிவழி சென்று, வரவேற்கிறதே சரி. 'ஏழு ஆண்டுகளுக்கு முன்னே, பட்டினத்திலே யாரோ ஒரு நாயர் முழங்கினால் என்ன? அது காட்டுக் கூச்சலே' என்று எல்லோரும் சும்மா இருந்தார்கள். அந்த முழக்கம் எப்படி வேலை செய்தது பார்த்தீர்களா? 'வக்கீல் பட்டம் பெற்ற தாழ்த்தப்பட்டோர் சிலர், திருவாங்கூரைச் சேர்ந்த வைக்கம்' என்னும் ஊரில் கோயில் தெருவில் நடக்கும் உரிமை கேட்டார்கள். -- 'அந்தத் தெருவில்தான் கோர்ட்டு கச்சேரி இருந்தது. அத்தெருவில் நடக்கக்கூடாதென்றால் அந்தக் கச்சேரிக்குச் சென்று வழக்காட முடியாது. அதாவது படிப்பை வைத்துத் தொழில் நடத்த முடியாது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/149&oldid=786904" இலிருந்து மீள்விக்கப்பட்டது