பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நினைவு அலைகள் வைக்கம் போராட்டம் 'டாக்டர் டி.எம். நாயர் சென்னையில் விட்ட பானம் வைக்கத்தில் வீழ்ந்து வேலை செய்தது. 'அந்தத் தெருவில் தாழ்த்தப்பட்டோர் நடப்பது வழக்கத்திற்கு மாறானது என்று மேல்சாதி இந்துக்கள் தடுத்தார்கள். 'அதை எதிர்த்து, காந்தி பானத்தை விட்டார்கள். அந்தக் கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப், அய்யப்பன், நீலகண்டன், நம்பூதிரி போன்ற காங்கிரஸ் முன்னணியினர் சத்தியாக்கிரகம் செய்தார்கள். அதில் ஈடுபட்ட பத்தொன்பது பேர்களையும் ஒரேயடியாகக் கைது செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து போராட அங்கே ஆள் இல்லை. "எங்களுக்கு ஆட்சியைக் கொடு என்று கிளர்ச்சி செய்தால், பத்துப் பேராவது துணிந்து வருவான்; சொந்தக்காரர்களையே எதிர்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்குச்சமத்துவம் கொடுக்க முயன்றால், இரண்டு பேர்கூடத் துணிந்து வரமாட்டார்கள். "அதோடு உள்நாட்டு அரசனையும் உள்ளூர் மக்களையும் எதிர்த்துக் கொண்டு வருவார்களா? எவனும் வரவில்லை. 'வைக்கம் போராட்டம் முதல் முயற்சியிலேயே நின்றுவிடும்போல் தோன்றிற்று. 'வைக்கம் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கியவர்களின் சார்பில் திரு நீலகண்டன் நம்பூதிரி, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் முன்னணியில் இருந்த ஈ.வெ.ராமசாமிக்கு அழைப்பு அனுப்பினார். வைக்கம் போராட்டப் பொறுப்பை ஈ.வெ. ராமசாமி ஏற்று நடத்த வேண்டுமென்று அன்போடும், நம்பிக்கையோடும் அழைத்தார்கள். ஈ.வெ.ரா.வும் வைக்கத்திற்குச் சென்றார். போராட்டப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரோ, திருவாங்கூர் மன்னருக்கு ஏற்கெனவே நண்பர். அந்தத் தொடர்பை வைத்து, அவருக்குச் சகல மரியாதையும் செய்து, தாஜா செய்ய அரசர் முயன்றார். ஈ.வெ.ரா.விடம் அது பலிக்குமார் போலீஸ் ஆணையை மீறினார்; கைது செய்யப்பட்டார். தண்டிக்கப்பட்டார். ஈ.வெ.ரா. சிறைக்குச் சென்றார். 'தண்டனை முடிந்து வெளியே வந்ததும் மறுபடியும் போராட்டத்தில் ஈடுபட்டார்; மீண்டும் சிறைத்தண்டனை. "ஆமாம் அப்பா, ஈ.வெ.ரா. மனைவி நாகம்மாளும் பெண் தொண்டர்களோடு அங்குச் சென்று கலந்துகொண்டதையும் நினைவுபடுத்திக்கொள் என்றார் ஒருவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/150&oldid=786908" இலிருந்து மீள்விக்கப்பட்டது