பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நினைவு அலைகள் யோசித்துப்பதில் சொல்லுவார்' என்று சொல்லலாமா? அந்த உத்தரவோடு நான் வரட்டுமா?" என்று கூறியபடியே திரு. சுப்ரமணியக் குருக்கள் எழுந்தார். மனிதத் தன்மையை இழக்க மாட்டேன் என் தந்தையார் அவரைப் பார்த்து, 'போகலாம், உட்காருங்கள். ஏற்கெனவே நன்றாகச் சிந்தித்தேன். அதன் பிறகே முடிவுக்கு வந்தேன். அப்படியே செய்து முடித்தேன். 'என் வீட்டில் ஆதிதிராவிடர்கள் தொடர்ந்து நுழைவார்கள். மற்றவர்கள் வீட்டிலும் நுழையும்படி அவர்களுடைய ஆட்களைத் தூண்டிவிடுவதாக இருந்தால், அவர்கள் எதிர்ப்புக்கும் வேதனைக்கும் பொருள் உண்டு. 'என் வீட்டில் நாணயமான யாரோ, நேர்மையான முறையில் துழைந்தால் இவர்கள் வெகுளுவதில் பொருளில்லை, தேவை யில்லாமல் தங்கள் மனத்தை வீணாகப் புண்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள். "தீட்டுப்பட்டு விட்ட என் வீட்டுத் திண்ணைக்கு வர அவர்கள் மனம் ஒப்பவில்லை யென்றால் வேறொருவர் வீட்டுத் திண்ணையில் எல்லாரும் கூடுவோம்; செய்திகளைப் படிப்போம். 'நீங்கள் எதிர்பார்த்திருக்கிறபடி நடக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் ஆதிதிராவிடர் என் வீட்டுக்குள் வருவார். அதை மாற்றிக் கொள்வதற்கு இல்லை. 'உங்களைப் புண்படுத்த இதைச் செய்யவில்லை. என் மனிதத் தன்மையை, சமத்துவ உணர்வை - நான் மதிக்கிறேன். அதைக் காப்பாற்றிக் கொள்ளவே இதைச் செய்தேன்; இனியும் தொடர்ந்து செய்வேன். o "இதை மட்டும் விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. அவர்கள் என்மேல் வெறுப்புக் கொண்டு, தங்களை வாட்டிக் கொள்ள வேண்டாம்' என்றார். மறைமுகமான அறைகூவல் இதைக் கேட்ட குருக்கள் முகத்தைச் சோகம் கவ்விற்று. கண்கள் கலங்கின; உதடுகள் துடித்தன; பேச்சு வரவில்லை. மூச்சுத் திணறிக் கொண்டே, நான் உங்களுக்கு எவ்வளவு வேண்டியவன் என்பதை நினைவுபடுத்தணுமா? புராணகாலத்திலும் சரி, இப்பவும் சரி, விளையாட்டே வினையாக முடிந்து விடுகிறது. அவர்களுக்கும் உம்பேரில் காழ்ப்பு இல்லை. பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/154&oldid=786916" இலிருந்து மீள்விக்கப்பட்டது