பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 117 பொது மக்களின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்களும் ஆள்வோரின் நம்பிக்கைக்குரிய நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து மாகாணத்தைப் பரிபாலிப்பார்கள். முழு உரிமையில்லாத, கட்டுகள் மிகுந்த இரட்டையாட்சி முறையைக்கூட சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சி திறம்பட நடத்திக்காட்டிற்று. ஒரளவு பொதுமக்களின் நலன் வளர்க்கும் சட்டங்களை நிறைவேற்றி, திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது. வட்ட ஆட்சிக்குழு, மாவட்ட ஆட்சிக்குழு ஆகியவற்றிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுப்பினர்கள் ஆனார்கள். இவற்றிற்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோ ருக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. செங்கற்பட்டு மாவட்டத்தில் எங்கள் மாகறல் தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதி. அதாவது எங்கள் பகுதியிலிருந்து வட்ட ஆட்சிக்குழுவிற்கு தாலுக்காபோக பகுதியிலிருந்து இரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். எங்கள் நிலத்தைக் குத்தகைக்குப் பயிரிட்டு வந்த திரு. பெரியகுப்பன் ஆதிதிராவிட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என் மாமா திரு. சுந்தரசேகரன் பொதுஉறுப்பினராக வெற்றிபெற்றார். நாடு முழுவதும் எழுந்த நாட்டுரிமைப் பேரலையும் அது எழுப்பிய வகுப்புரிமைச் சிற்றலைகளும், காலத்தின் கட்டளைகளாகும். தீண்டாமை தளர்வதற்குத் தேர்தல் முறையும், அதில் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோருக்கும் இடம் ஒதுக்கும் முறையும் ஒரளவு உதவின. ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பொது அமைப்புகளில் இடம் கிடைக்கிறது. இது அவர்கள் படும் கொடுமைகளை உலகறியச் செய்வதற்கு வாய்ப்பாகிறது. அவர்கள் கோரிக்கைகளுக்குச் சட்டபூர்வமான அரங்கம் கிடைக்கிறது. தொடக்கத்தில் எப்படியோ? இருப்பினும், கால ஒட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்ற உறுப்பினர்களோடு மன்றங்களில் சமமாக அமர்ந்து செயல்படும் நிலையை உருவாக்கியுள்ளது. அந்த நெம்புகோலைக் கொண்டு, சாதி அமைப்பைப் புரட்டிப் போட்டு இருக்கவேண்டும். இதுவரை அப்படி நடக்கவில்லை. காரணம் பல. பதவிகளைப் பொது வாய்ப்புகளாகவே பயன்படுத்தும் துடிப்பும் புரட்சிப் போக்கும் உள்ள தலைவர்கள் - அருகியது பெருங் காரணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/159&oldid=786927" இலிருந்து மீள்விக்கப்பட்டது