பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - நினைவு அலைகள் திரு. வி. க. தமிழறிஞர். இவர் இந்நூற்றாண்டுவரை வளர்ந்து வந்துள்ள அரசியல், பொருளியல், சமூக இயல் கோட்பாடுகளை, தமிழில் சொல்லவும் எழுதவும் முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய தமிழ்நாட்டுத் தலைவர்களான ராஜாஜி, பெரியார் டாக்டர் வரதராஜுலு முதலியவர்களுக்கு முன்னோடி. தமிழர்களிடையே நாட்டுப் பற்றினையும் உரிமை யுணர்வினையும் வளர்த்த உத்தமத் தலைவர்களில் ஒருவர். நம் நாட்டில் தொழிலாளர் இயக்கத்தை நடத்துவதில் இன்னல் பல ஏற்ற இணையற்ற தியாகி. ஒழுங்கான ஊதியம் கொடுத்துவந்த அமைதியான ஆசிரியர் பணியினை உதறிவிட்டு, பொதுத்தொண்டு என்னும் காட்டாற்று வெள்ளத்தில் குதித்து நீந்தி, மோதி, ஆள்வோரின் சீற்றத்திற்கும் ஆளப்படுவோரின் அலட்சியத்திற்கும் ஆளான சாதுக்களில் சிறந்த சாது, திரு. வி. க. ஆவார். இவர் தன்னையோ, தன் குடும்பத்தையோ வளப்படுத்திக் கொள்ளாத நல்ல பொதுத் தொண்டர் ஆவார். இந்த நல்லார், ஆழ்ந்த சமயப் பற்றாளர்; பல சமயக் கோட்பாடு களுக்கு இடையே, ஒருமைப்பாட்டைக் காண முயன்ற சன்மார்க்கர். தீந்தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டு, தமிழ்த் தாயைச் சிறப்புச் செய்தவர் திரு.வி.க. இவர் எழுதிய பல நூல்களில் 'சைவத்தின் சமரசம்' என்னும் சிறு நூல் ஒன்றாகும். அரை ரூபாய் விலையில் வெளியான அந்நூலை, முதல் பதிப்பிலேயே ஆவலுடன் வாங்கிப் படித்து மகிழ்ந்து இருந்தேன். எனவே, இதன் ஆசிரியர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. வைக் கண்குளிரக் காணவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயற்கையாக எழுந்தது. அவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற அவாவும் மேலிட்டது. i. இதற்கு வழியுண்டா? அரசியல் மாநாட்டில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களை நுழையவிடுவார்களா? இக் கேள்விகள் மின்னின. அப்போது என்னுடன் படித்து வந்த திரு. தா. கதிர்வேல் தமிழ்ப் பற்றாளர்; நாட்டு நடப்புகளையும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து வந்தவர். அவர், என்னுடைய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டு பிடித்தார். இளைஞர்களும் மாநாட்டுக்குள் செல்லலாம்; பார்வையாளர் களாக மட்டும் கலந்து கொள்ளலாம்; பார்வையாளர்களுக்கு நுழைவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/166&oldid=786940" இலிருந்து மீள்விக்கப்பட்டது