பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நினைவு அலைகள் அப்படி வெளிநடப்புச் செய்தவர்கள் யார்? எதுபற்றி இவ்வளவு மோதல் என்று அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கேட்டோம். அவருக்கும் தெரியவில்லை. கருத்துக்கும் காதுக்கும் வேலை இல்லாமல் பொம்மைகளாக உட்கார்ந்து இருந்தோம். பிறகு, கதிர்வேலுவும் நானும் வெளியே வந்தோம். மாநாட்டுக் கொட்டகை வளைவிற்குள் ஆங்காங்கே, சிறு சிறு கூட்டங்கள். கதர் உடை அணிந்திருந்த பெரியவர்கள் நான்கைந்து பேர்களாக நின்றுகொண்டு, உணர்ச்சி வயப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கும் அங்கும் நின்று, உரையாடல்களுக்குச் செவி சாய்த்தோம். காங்கிரசைக் கட்டி வளர்த்த ஈ.வெ. ரா. 'மாநாட்டுத் தலைவராகிய திரு.வி.க. விற்கு எவ்வளவு சிறப்பாக வரவேற்பு வளைவுகள் போட்டோமோ அவ்வளவு சிறப்பாக அல்லவா, ஈ.வெ.ரா.வுக்கும் வரவேற்பு வளைவுகளை நாட்டினோம். 'வைக்கம் வீரரே வருக, வருக என்று ஒப்புக்காகவா சொன்னோம்? உண்மையாகவே ஈ.வெ.ரா., வைக்கம் வீரர்தான். அதற்காக எவ்வளவு விலை கேட்பது?' என்றார் ஒருவர். == 'அப்படி என்ன விலை கேட்கிறார்? தனக்காகப் பதவிகளுக்குப் போராடவில்லை. தமிழ் மாகாண காங்கிரசின் உயர் பதவிகளாகிய செயலாளர், தலைமைப் பதவிகளை நாம்தானே அவரைத் தேடிக் கொடுத்தோம். 'அப்பதவிகளை, நாயக்கர் பெற்றதால், அவருக்கென்ன, இல்லாத புகழ் வந்துவிட்டது? காங்கிரசு தமிழ் மக்களிடம் இவ்வளவு வேகமாகப் பரவியிருப் பதற்குக் காரணம், ஈ.வெ.ரா. தானே அவருடைய தொண்டு மகத்தானது. சுதந்திரத்திற்காக ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டு உண்மையும் வாய்மையும் மெய்மையுஞ் செறிந்ததாகும். சீமானாக வாழ்ந்த அவர், காந்தியடிகளின் தலைமையை ஏற்றுப் பிறகு எளிமையில் நின்று தொண்டாற்றுகிறார். பட்டி தொட்டி யெல்லாம் தம் தோளில் கதர் மூட்டையைச் சுமந்து கொண்டு சென்று விற்று, அதைப் பரப்பியவராயிற்றே! 'ஆனாலும் சில ஆண்டுகளாகவே, காங்கிரசு மேடைகளிலேயே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மிகத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தக் கருத்து அவரை ஆட்கொண்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/168&oldid=786944" இலிருந்து மீள்விக்கப்பட்டது