பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 127 'அவர் தாட்சண்யத்திற்காகவும் கொள்கையை விடமாட்டார்; பதவிகள் கொடுத்தும் அவரை வயப்படுத்த முடியாது. அஞ்சாமையும் சுறுசுறுப்பும் அவருடைய இயல்பு. 'அப்படியென்றால், வகுப்புரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறீரா ஒய்' என்று ஒருவர் மிகவும் கோபப்பட்டார். "எள்ளு என்பதற்குள் எண்ணெய் என்று சொல்ல வேண்டாம்.' 'காங்கிரசைக் கட்டி வளர்த்த ஈ.வெ.ரா. வைப் போன்றவர்கள் வெளியே இருப்பது நல்லது அல்ல என்றே நான் கவலைப்படுகிறேன். எப்படியாவது அவரைக் காங்கிரசுக்கு உள்ளேயே வைத்திருக்க வேண்டும். 'தஞ்சாவூரில் 1921இல் நடந்த மாகாண மாநாட்டிலேயே இதை நாயக்கர் கொண்டு வந்தார். அப்போது சி.ஆர். எவ்வளவு சாதுர்யமாகச் சமாளித்தார் என்பது உங்களுக்கு நினைவில் வருகிறதா?' என்று கேட்டார். 'நல்லா நினைவுக்கு வருகிறது. இது தீர்மான ரூபமாக வரவேண்டாம். கொள்கையாக வைத்துக் கொள்வோம்' என்று சொல்லியல்லவா நிலைமையைச் சமாளித்தார். சி.ஆர். மூளையே மூளை' என்றார் ஒருவர். 'அப்படி ஏதாவது சொல்லி, செய்து, இப்போதும் சமாளித்திருக்க வேண்டும். போதாத வேளை, 'டெக்னிகல் பாய்ன்டில் மறைந்து கொண்டோம். ஈ.வெ.ரா. வைப் போன்றவர்களை ஏதோ சாக்கில் மூக்குடைத்து, வெளியேற்றுவது முட்டாள்தனம். இப்பவும் சி.ஆர். போன்றவர் தலையிட்டால், வழி கண்டுபிடித்து விடுவார். ஈசுவரன் விடப் போகிற வழி எப்படி இருக்கிறதோ!' என்று கவலைப்பட்டார். வகுப்புரிமைத் தீர்மானம் அடுத்த குழுவில் பேசியவர்கள், 'பொல்லாத பரந்த ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்பதை எப்படி மறக்கலாம். அதற்கு ஒருமித்த சிந்தனை பலமாவது வேண்டும். 'ஒற்றுமையே வலிமை என்பதைத் தியாகிகளாகிய நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். "நோயை நான் தேடிக் கொள்ளவில்லை; எனக்குந் தெரியாமல் எப்படியோ வந்துவிட்டது. அதைப்பற்றிக் கவலைப்படாமல், இதையும் அதையும் சம்பாதிப்பதில் ஈடுபடுவோம்' என்று காசநோய்க்காரன் முன்னந்தால், எப்படி இருக்கும்? அதைப் போன்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/169&oldid=786946" இலிருந்து மீள்விக்கப்பட்டது