பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நினைவு அலைகள் சாதிப் பிரிவுகளை நாம் ஏற்படுத்தவில்லை. இவற்றை நம் முன்னோர் எப்போது ஏற்படுத்தினார்கள்? என்பவை முக்கியமல்ல. பயபக்தியோடு அதை எல்லோரும் ஏற்றுக்கொண்ட காலம் வரையில் சரி. 'இப்போது பலரும் குமுறுகிறார்களே. இந்த நிலையிலே, எல்லோருமாகச் சேர்ந்து ஒரே அணியாக இருந்து வெள்ளைக்கார ஆட்சியை விரட்டுவதற்கு, சாதிவேற்றுமை அல்லவா தடையாக இருக்கிறது. சாதி ஒழிப்பு ஐந்து பத்து ஆண்டுகளில் வெற்றி பெறாது. ஐந்தாறு தலைமுறைகளிலாவது வெற்றி பெறுமா என்பதும் ஐயப்பாடே. அவ்வளவு காலம் நீடிக்கப் போகிற நோய், சமுதாயத்தையே கவிழ்த்துவிடக் கூடாதே' மற்றொருவர் தலையிடுகிறார். "அதைத்தானே ஈரோட்டார் சொல்லுகிறார். நோய் தீரும் மட்டும் மருந்தை உண்டு கொண்டே இருப்பது போல், வகுப்புகள் உள்ளவரை வகுப்புரிமைக் கொள்கை செயல்படுவதே நல்லது என்கிறார். சாதிகள் உள்ளவரை எல்லாச் சாதியாருக்கும் சுகுரான பங்கு இல்லாவிட்டாலும், மொத்தத்தில் நியாயமான பங்கு கொடுப்பதே நீதி. நீதியோ இல்லையோ! புதிய உணர்வை வளர்ப்பதற்கு அது துணையாகும். எல்லாருக்கும் பங்குபோட்டு வேலை கொடுப்பார்கள் என்னும் நம்பிக்கை தழைத்துவிட்டால், அப்புறம் 'நாமிருக்கும் நாடு நமதே என்பதும் நாட்டுப் பற்றும் பொதுமக்களிடம் வெகுவாக ஓங்கி வளர்ந்துவிடும். 'ஈ.வெ.ரா. கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை விஷயாலோசனைக் குழுக் கூட்டத்தில் தோற்கடித்தது குறுகிய பார்வை. அதைச் சாக்காகக் காட்டி, பொது மாநாட்டில் கிளப்பவிடாது தடுத்தது பிடிவாதம்; எனக்கு என்னவோ இன்று நடந்த போக்குப் பிடிக்கவில்லை' இக்குழுவில், மற்றொருவர் எடைபோட்டுப் பேசினார். 'அப்படியென்ன ஈ.வெ.ரா. திடீரெனக் குண்டு போட்டு விட்டார். 1920இல் நடந்த திருநெல்வேலி மாநாட்டின்போதே இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். விஷயாலோசனைக் குழுவில் அது நிறைவேறி விட்டது. மாநாட்டுத் தலைவர் எஸ். சீனிவாச அய்யங்கார் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநாட்டில் அனுமதிக்க மறுத்துவிட்டார். ஒட்டுக்கு விட்டிருந்தால் அப்போதே நிறை வேறியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/170&oldid=786950" இலிருந்து மீள்விக்கப்பட்டது