பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 129 'தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் 1921 இல் மீண்டும் கொண்டு வந்தார். சி.ஆர். ஆனதால், கெட்டிக்காரத்தனமாக, கொள்கையாக வைத்துக் கொள்ளுவோ மென்று சமாளித்துவிட்டார். 'திருப்பூரில் 1922 இல் நடந்த மாகாண மாநாட்டிலும் ஈ.வெ.ரா. விடவில்லை. மறுபடியும் 1923 இல் சேலம் மாநாட்டில், அவர் இதைக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு திருவண்ணாமலையில், ஈ.வெ.ரா.வின் தீர்மானத்தைத் தோற்கடித்தோம். இப்பவும் வந்தது. சண்டையை முற்றவிட்டு விட்டோம்' என்றார். நான்காமவர், பேச்சை உற்சாகத்துடன் தொடர்ந்தார். 'எனக்கு, திருவண்ணாமலை மாநாட்டில், ஈ.வெ.ரா. ஆற்றிய தலைமை உரையின் சிறு பகுதி மனப்பாடஞ் செய்ததுபோல் நினைவிலிருக்கிறது. 'ஒரு மதத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் (பிராமணர் - பிராமணர் அல்லாதாருக்குள்) வேற்றுமையுணர்வு தோன்றுவானேன்? வேற்றுமைக்கு அடிப்படையான காரணங்கள் இருத்தல் வேண்டும். அக்காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்கத் தேச பக்தர்கள் முயலவேண்டும். 'காங்கிரசுவாதியாயிருந்த டாக்டர் நாயர், திடீரென ஒரு கட்சியைத் தோற்றுவிக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவையோ, அவை இன்னும் நிற்கின்றனவா, இல்லையா? " என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. 'அக்காரணங்கள் அழிந்து விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவை தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும்வரை, தமிழ்நாட்டில் பிராமணர், பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுதல் அரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாடு காங்கிரசில் காரியதரிசியாகவும் தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன்' என்று ஈ.வெ.ரா. பேசினது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. புண்ணை மூடி வைத்து அழுகவிட வேண்டாம் பங்காளிச் சண்டை வரக்கூடாது. அதைப் போன்ற நோய் வேறொன்றும் இல்லை. வந்துவிட்டால், நல்லபடி, சமாதானமாக, ஒர் உடன்படிக்கைக்கு வந்துவிடுவதே அறிவுடைமை; அதுவே நீளத்தில் நன்மை பயப்பது. அப்படிச் செய்துவிட்டால், பெரிய பெரிய நடவடிக்கைகளுக்குப் போதிய நாட்டமும் நேரமும் முயற்சியும் செலுத்தலாம்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/171&oldid=786954" இலிருந்து மீள்விக்கப்பட்டது