பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 135 இந்து அறநிலையச் சட்டமும் நீதிக் கட்சி அமைச்சரவை நிறைவேற்றிய சட்டங்களில் ஒன்றாகும். தியாகராயர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோரின் தன்னலமற்ற பொதுத் தொண்டு, நாட்டுப்புற இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அக்கவர்ச்சியே, காஞ்சியில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் முளைப்பதற்குத் துண்டுகோலாக அமைந்தது. - எனது ஏக்கம் தலைமைச் சங்கம் சென்னையில் இருந்தது. அச்சங்கத்தில் நானும் சேர்ந்து பணியாற்ற விரும்பினேன். என் தந்தையின் அனுமதியைக் கோரினேன். அவர் மறுத்துவிட்டார். என் மாமாவிற்கு உரிமை கொடுத்துவிட்டு, அவர் வீட்டிலேயே வளர்ந்து கொண்டிருந்த எனக்கு அதை மறுத்ததைப் பற்றிப் பல நாள் மனம் புழுங்கினேன். வெகு நாள்களுக்குப் பிறகுதான் உண்மை விளங்கிற்று. என் மாமா, படிப்பை முடித்த பிறகு, வேலைக்குப் போவதில்லை என்பது முடிவாகிவிட்டது. ஒரே பிள்ளையாக இருந்த அவர், தம் சொத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார். அதோடு, வட்ட, மாவட்ட ஆணைக்குழுக்களில் உறுப்பினராகிப் பொதுத் தொண்டு ஆற்றுவதாகத் திட்டம். எனவே, பொதுச் சங்கங்களில் சேர்ந்து, பயிற்சி பெறுவதே, அவருக்குப் பொருத்தம். எனக்குப் பெரியவர்கள் முடிவு செய்திருந்த வழி வேறு. நான், நான்கு பிள்ளைகளில் ஒருவன்; அவர்களில் மூத்தவன். கிளர்ச்சிகளுக்கு முந்தாதவன். எனவே, நான் பொது வாழ்க்கையில் குதிப்பது நல்லது அல்ல. கல்லூரிக்குச் சென்று, படித்துப் பட்டம் பெறவேண்டும். பிறகு அரசின் அலுவலில் சேரவேண்டும். நல்ல ஊழியஞ் செய்வதன்மூலம் நான் பொதுத் தொண்டாற்ற வேண்டுமென்று, என் மாமாவும் தந்தையும் முடிவு செய்திருந்தார்கள். இது எனக்கும் பிடித்திருந்தது. ஆகவே, பெரியவர்கள் விருப்பப்படி, படிப்பில் ஒருமனப்பட்டிருந்தேன். விட்டிற்கு வரும் கட்சிப் பத்திரிகைகளையும் கலா நிலையம்' போன்ற இலக்கிய முன்னோடி சஞ்சிகைகளையும் விரும்பிப் படிக்க நான் முழு உரிமை பெற்று இருந்தேன். இதைப் படி; அதைத் தொடாதே போன்ற ஆணைகளை என் வீட்டில் கேள்விப்படவில்லை. எனவே, துப்பறியும் தமிழ் நாவல்கள் மேலும் என் நாட்டஞ் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/177&oldid=786966" இலிருந்து மீள்விக்கப்பட்டது