பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நினைவு அலைகள் - ஆசிரியர் மணி, பண்டிதர் எஸ்.எஸ். அருணனிகிரிநாதர், ரங்கராஜூ, கோதைநாயகி ஆகியோரின் நாவல்கள் என் கைக்கு எட்டின. எப்படி? எங்களுர் பெற்ற முதல் படித்த பெண்மணி நான் மேல் படிவங்களில் படித்துக் கொண்டிருக்கையில், பள்ளிப் படிப்பை முடித்த என் மாமா நெ.கோ. சுந்தரசேகரனுக்குத் திருமணம் ஆயிற்று. அவருடைய மனைவியின் பெயர் திருமதி நாகரத்தினம் என்பதாகும். அவர் வேலூரில், வணிகராகவும் பாங்கராகவும் இருந்த திரு எம். துரைசுவாமி முதலியாரின் மூத்த மகள். அந்நகரத்திலேயே வளர்ந்து, உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர்; மிகமிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவர். வந்த இடத்திலும் செல்லமாகப் போற்றப்பட்டவர். நாட்டுப்புறத்தில் வாழ்க்கைப்பட்ட அவருக்குப் பொழுதுபோவது கடினமாக இருக்குமென்று எண்ணிய பெற்றோரும் உறவினர்களும் வருவோர் போவோரிடம் நாவல்களைக் கொடுத்து அனுப்புவார்கள். மாமி படித்த பிறகு, நான் படிப்பேன். வேலூரிலிருந்து, நெய்யாடுபாக்கத்திற்கு, முதன் முதலாக, குலோப் ஜாமூன், ஜாங்கிரி, பால்கோவா, பாதுவடிா போன்ற இனிப்புகளையும் உப்பேறியையும் (உருளைக் கிழங்கு சிப்ஸ்") அறிமுகப்படுத்திய அந்த அம்மையார், நாவல் படிக்கும் பழக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். எங்களுரில் முந்திய தலைமுறைப் பெண்களுக்குப் ப்டிப்பே இல்லை. என் மாமி காலத்தில் தொடங்கியது. இன்று எல்லார் வீடுகளுக்கும் பரவியுள்ளது. நாவல்களைப் படித்தது, என்னை நாவல் ஆசிரியனாக ஆக்கா விட்டாலும், விரைந்து படிக்கும் ஆற்றலை வளர்க்கத்துணையாயிற்று. மற்றோர் பொழுதுபோக்கு அக்காலகட்டத்தில் நுழைந்தது. ஒரே அளவான எழுத்து அட்டைக் குவியலில் இருந்து, எழுத்துகளைப் பொறுக்கியெடுத்து, சொற்களைஆக்கும் விளையாட்டு அறிமுகமாயிற்று. இதுவும் எங்களுருக்கு வேலூரில் இருந்து இறக்குமதியாயிற்று. முதலில் தமிழ் எழுத்துகளைக் கொண்டு, நானும் என் மாமியும் போட்டி போடுவோம். பின்னர், ஆங்கிலச் சொற்களை ஆக்கும் விளையாட்டில் போட்டியிட்டோம். இப்போட்டிகள், விடுமுறைக் காலங்களைப் போக்க உதவியதோடு, தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல் வளத்தையும் பெருக்கின. என் தமிழ், ஆங்கில அறிவு வளரப் பெரிதும் உதவின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/178&oldid=786967" இலிருந்து மீள்விக்கப்பட்டது