பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நினைவு அலைகள் பின் யாருக்கு நன்மை? இந்திய மக்கள் அனைவருக்கும் நன்மை. அது மேலும் மேலும் விரிந்ததே! கொலைக் கருவிகளை ஏந்தாமலே, நாடு தன்னாட்சி உரிமையைப் பெற முடியும் என்பதை அண்ணல் காந்தி மெய்ப்பித்தார். இது பல நாட்டின் எழுச்சிக்கு, உரிமைப்போருக்கு, உதவும் சுதந்திரக் காற்றாக அமைந்தது. எனவே, ஆற்றல்களை வளர்ப்பது, அவற்றைப் பெற்றுள்ள தனிமனிதர்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும், தனியாளின் அறிவும் ஆற்றல் பெருக்கமுமே துணை. கல்வியின் ஒரு கூறு. பயில்வோரின் ஆற்றல்களை வளர்ப்பதாகும். இதற்கு வழிசெய்யும் கல்விமுறையே சரியான கல்வி முறை. முற்காலத்துக் கல்வி முறை மனிதன் அறிவை, ஆற்றலை மட்டும் பெற்று இருக்கவில்லை. உள்ளமும் உணர்வும் கொண்டவன். இவையும் வளர்க்கப்பட வேண்டும்; செம்மைப்பட வேண்டும். எவ்வழியில்? தனித்தனி முனைப்போடு இருக்கவா? இல்லை. ஒன்றியிருக்க, நான்கு பேர்களோடு கூடியிருக்க, கூடித்தொழில் புரிய, எல்லோரும் எல்லோருடைய நலன்களையும் வளர்க்கும் வகையில் உலகியல் ஈடுபாடுகளில் பங்குகொள்ள, இப்படிப் பண்படுத்துவது, கல்வியின் நோக்கங்களில் ஒன்றாகும். மனிதனின் மூன்று கூறுகளையும் இணைத்து வளர்த்தால், கல்வி முயற்சி வெற்றி பெறுகிறது. அதில், எந்த அளவிற்குக் குறைபடுகிறதோ, அந்த அளவிற்குக் கல்விமுறை, தோல்வியைத் தழுவிக் கொள்ளுகிறது. வெறும் அறிவைக் கூர்மைப்படுத்துவதாயின், கல்விக் கூடத்திற்குச் செல்லத் தேவையிராது. சிறந்த நல்லாசிரியர் ஒருவரை அண்டி, அவரோடு இருந்து, அவர் இப்போதும் அப்போதும் உதிர்க்கும் அறிவு முத்துகளைத் திரட்டி வைத்துக்கொண்டு சிறந்த அறிவாளியாகி விடலாம். முற்காலத்தில், இளவரசர்களும் மேட்டுக் குடிமக்களும் கல்வி கற்ற முறை இதுவே. முற்காலத் தமிழ் ஞாயிறுகள், கல்வி கற்றது தமிழ்க் கல்லூரிகளில் அல்ல. புலவர் ஏறு ஒருவரிடம் புலமைப் பசியுடைய ஒருவரோ இருவரோ பாடங்கேட்டு அறிஞர்கள் ஆனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/180&oldid=786970" இலிருந்து மீள்விக்கப்பட்டது