பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நினைவு அலைகள் நாங்கள் பெறும் கல்வி, தேர்வுகளில் தேர்ச்சி பெறவும் உதவுவதோடு, வாழ்க்கையில் வெற்றி பெறவும் உதவவேண்டும் என்பதை அக்காலக் கல்வியாளர்கள் உணர்ந்திருந்தார்கள். வாழ்க்கைக்கு உதவ வேண்டுமானால், பள்ளியில் வளர்த்துவிடும் அறிவு நாட்டம், பள்ளியை விட்டதும் பட்டுப் போகக்கூடாது. ஆசிரியரின் மேற்பார்வையில் இருக்கும் மட்டும், தோழமை உணர்வோடு இருந்துவிட்டு, படிப்பை முடித்ததும் தலைவிரித்தாடும் போக்கு இருப்பது 'கல்வி பயன்படவில்லை' என்பதற்குச் சான்று. . கட்டுப்பட்ட படிப்பை முடித்த பிறகும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படிப்பதற்கு ஆர்வம் இருக்குமானால், பெற்றது நல்ல கல்வி என்று மதிப்பிடலாம். என் தலைமுறையினர் பலருக்கு ஓரளவாவது தொடர்படிப் பின்மேல் நாட்டம் இருப்பதற்குக் காரணம். அளவுக்கு மீறிய பாடத் திணிப்பால் நாங்கள் திண்டாடவில்லை என்பதாகும். பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திற்கு அப்பால் நாங்கள் விரும்பியவற்றைப் படிக்க வேண்டிய நேரம் இருந்தது. நான் படித்த காலத்தில் கல்விச் சூழ்நிலை இக்கால வாழ்க்கை, எல்லாச் சமுதாயங்களிலும் விரைந்து, மாறி வருகிறது. இம்மாற்றமும் விரைவும் குறையாது. இவற்றைச் சமாளிக்கும் அறிவைத் தேட முனைந்தால், அதுவும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு ஒர்முறை இரட்டிப்பாவதைக் காண்கிறோம். வாழ்நாளைப் பார்த்தால் நீள்வது தெரிகிறது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியனுடைய சராசரி வயது, பதினேழாக இருந்தது. இன்றோ? ஐம்பத்திரண்டாக உள்ளது. வருங்காலத்தில் எண்பத்தி ரண்டாக வளரும். இந்நிலையில், மாணவருடைய நெடிய வாழ்நாள் முழுமைக்கும் வேண்டிய அறிவினை, கல்வி நிலையங்களை விட்டு வெளியேறு வதற்கு முன்பே, கொடுத்துவிட முடியுமா? முடியாது என்று அக்காலக் கல்வியாளர்கள் கருதினார்கள். , பள்ளிக்கூடங்கள், பெரும் அளவிற்கு அறிமுகக் கூடங்களாகவே, இயங்க முடியும். கல்லூரிகளும் எல்லாவற்றையும் வழங்கி, முதிர்ந்த அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் அறிவுக்கூடங்களாகி விட முடியாது. பல்வகை அறிவினோடு தொடர்புபடுத்துவதிலும் அவற்றை நாடும் போக்கினை வளர்ப்பதிலும் கல்வி நிலையங்கள் வெற்றிபெற்றால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/182&oldid=786972" இலிருந்து மீள்விக்கப்பட்டது