பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. என் கிணற்றுத் தவளை வாழ்க்கை என்னுடைய பள்ளிப் பருவத்தின் வாழ்க்கை, ஒரு குறுநில வாழ்க்கையாக அமைந்திருந்தது. அக்காலத்தில் நான் என் ஊருண்டு காஞ்சிபுரம் உண்டு என்று வாழ்ந்தேன். காஞ்சிபுரம் வரும் வழியில் வாலாஜாபாத்திற்குள் நுழைய நேரிடும். சாரணர் குழுவில் ஒருவனாகப் பழைய சீவரம் சென்றுள்ளேன். அப்பருவத்தில் செங்கற்பட்டிற்கோ, மாமல்லபுரத்திற்கோ, திருக்கழுக் குன்றத்திற்கோ நான் சென்றதில்லை. விடுமுறைகளின் போது, கோயில் திருவிழாக்களையோ, உறவினர்கள் வீட்டுத் திருமணங்களையோ காண்பதற்காக, மாகறல் என்ற பெரும் சிற்றுாருக்குப் பலமுறையும், ஆற்பாக்கம் என்னும் ஊருக்குச் சில முறையும் சென்று வந்திருக்கிறேன். மேற்படிக் காரணங்களுக்காக, என்னுருக்கு எதிரில் உள்ள இளையனார் வேலூருக்குப் போயிருக்கிறேன். மளிகைக்கடையில் அஸ்கா சர்க்கரை, ரவை, திராட்சை, முந்திரி ஆகியவை வாங்கவும் இளையனார் வேலூருக்குச் சில முறை சென்றதுண்டு. என்னுருக்குக் கிழக்கே உள்ள வயலக்காவூரும் எனக்குத் தெரியும். இந்த ஊர்களுக்குச் செல்லும்போதும் இங்கும் அங்கும் ஒடி ஆடிப் பார்த்ததில்லை. எதற்காகப் போகிறேனோ அதை மட்டும் கவனித்துக் கொண்டு திரும்பிவிடுவேன். திருவிழா, திருமணங்களுக்குச் செல்லும்போது, தனியாகப் போனதாகவே நினைவில்லை. என் வீட்டுப் பெரியவர்களோடு சேர்ந்தே போயிருப்பேன். தனிப் பயணம் என்பதை அறியாமலேயே வளர்ந்துவிட்டேன். ஒரு வகையில், என் இளமைக்கால வாழ்க்கை, கிணற்றுத் தவளை வாழ்க்கையாகவே இருந்தது. என் தந்தையாரும் என் சிற்றப்பா ஒருவரும் வரவழைத்த 'திராவிடன்', 'சுதேசமித்திரன்’ நாளிதழ்கள் என்னை உலகோடு தொடர்புபடுத்தின. என் தந்தை வரவழைத்த நவசக்தி', 'குடியரசு வார இதழ்கள் என் சிந்தனைகளைச் சிற்றுார்களுக்கு அப்பால் வெளி உலகுக்குத் திருப்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/186&oldid=786976" இலிருந்து மீள்விக்கப்பட்டது