பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 149 மூர்த்தியில்லாக் கோயிலை முதன் முறையாக நான் வேலூர்க் கோட்டைக்குள் கண்டேன். தண்ணிர் இல்லாத பாலாறு, எனக்கு ஏற்கெனவே பழக்கமானதே. 'ஓடாத பாலாறு, என்றும் எங்கும் சுரக்கும் பாலாறு' என்பதும் எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, வேலூர் பாலாறு எவ்விதக் கிளர்ச்சியும் கொடுக்கவில்லை. கோட்டையும் அதைச்சுற்றியிருந்த ஆழமான அகழியும் நான் முன்னர்க் காணாத புதுமைகள். அவை எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஊட்டின. இப்படியொரு கோட்டை கட்டவேண்டுமென்ற பேரவா எழவில்லை. கோட்டை கட்டி வாழ்ந்த நாம், நாட்டை இழந்து அடிமைகளாய் நிற்கிறோமே என்ற சோகம் பிறந்தது. 'ஒற்றுமையின்மை, பொறாமை, இன அழிவுப்போக்கு, வந்தவனுக்கு இடம் கொடுத்துவிட்டது என்று என் தோழர்கள் கூறக் கேட்டேன். அவர்கள் இருவரும் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று, அந்தக் கல்லூரியை, அமெரிக்கக் கிறுத்துவர்கள் நடத்தி வந்தார்கள். அவர்கள் ஆங்கில ஆட்சிக்குப் பின்பலமாக நிற்கவில்லை. o எனவே, இந்திய விடுதலையைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு உரிமை இருந்தது. மலைமீது காற்றும் மழையும் ஒரு முறை, திரு. சம்பந்தமூர்த்தியும் திருநாவுக்கரசும் என்னைக் கூட்டிக்கொண்டு, வேலூரை ஒட்டிக் கிழக்கில் உள்ள மலைமீது ஏறினார்கள். அங்குக் கட்டப்பட்டுள்ள கோட்டையைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் மலை உச்சிக்குச் சென்றபோது பளிச்சென்று நல்ல வெளிச்சம். மேகங்கள் எங்கும் தென்படவில்லை. கோட்டையையும், அங்கிருந்து நான்கு பக்க மலைத்தொடர்க் காட்சிகளையும் கண்டு, மெல்ல இன்புற்றோம். இதையும் அதையும் ஒருவருக்கொருவர் காட்டி மகிழ்ந்த பின்னர், மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று முடிவு செய்து கொண்டோம். ஓரிடத்தில் உட்கார்ந்து கையில் கொண்டுவந்திருந்த தின்பண்டங்களைச் சுவைக்கத் தொடங்கினோம். சட்டென்று இருண்டது; வானத்தைப் பார்த்தோம். கருமேகங்கள் படையெடுத்தன. வானத்தை மூடின. எங்களை நோக்கி விரைந்து எழுந்து வந்துகொண்டிருந்தன. காற்றும் சீறியது. விரைந்து எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/191&oldid=786982" இலிருந்து மீள்விக்கப்பட்டது