பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 151 சில நாள் வரை, நான் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதைக் கேள்விப்பட்டார். வெட்கப்பட வேண்டாமென்று கனிவோடு கூறினார். - இருந்தும், ஒவ்வொரு திங்களிலும் இரண்டொரு நாள்களுக்கு மேல் கடைப்பண்டம் உண்ணவில்லை. உற்றார் பொருளையே உண்ண அவாவாமல் வளர்ந்ததால் பிற்காலத்தில் ஊரார் சூட்டிய மாலைகளையும் பொன்னாடைகளையும் ஆங்காங்கே ஏலம் போட்டு, அவ்வூர்ப் பகலுணவிற்குக் கொடுத்துவிட்டு, நடையைக் கட்டுவது எளிதாகவும் இயல்பாகவும் இருந்தது. தனக்கல்லவே: ஊர்க் குழந்தைகளுக்குத்தானே ஏலப்பணம்' என்பதை உணர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தையும் பொருட்படுத்தாது சிலவேளை சக்திக்கு மேற்பட்டு, போட்டி போட்டு, மாலைகளைக்கூட ஐந்துக்கும் பத்துக்கும் ஏன் ஐம்பதுக்கும் - மதிப்பிருந்த அக்கால ரூபாய்க் கணக்கு ஏலம் எடுத்துக் கொண்டார்கள். அந்தத் தியாகங்களை எப்படிப் போற்ற! கன்னையா கம்பெனியின் தசாவதார நாடகம் என் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, மற்றொரு பெருநகரையும் பார்க்கும் வாய்ப்பு திடீரெனக் கிட்டிற்று. இம்முறை என் தந்தைக்கும் தெரியாது வெளியூர் சென்றேன். வேறு வழியின்றி, தவறான ஆணைகளை நிறைவேற்றிவிட்டு, இழிவுக்கு ஆளாகும் இக்கால அதிகாரிகள் சிலருடைய நிலைக்குத் தள்ளப்பட்டேன். 1. நான் பதினோராவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் 'சென்னை மாநகரில் கன்னய்யா கம்பெனியார் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் அந்நாடகக் குழு புகழ் பெற்றிருந்தது. அவர்கள் தசாவதாரம்' நாடகத்தை நடிக்கப் போகும் செய்தி, காஞ்சிபுரத்திலும் விளம்பரமாயிற்று. என் அத்தை உறவினர் ஒருவர் விதவை - காஞ்சியில் குடியிருந்து தம் ஒரே மகனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். இந்திய விதவைகள் நினைக்கக் கூடியது என்ன? 'மறுமைக்கு நன்மை' ஒன்றையே. எனவே, அவருக்கு அளவிற்கு மீறிய பக்தி உண்டு. தசாவதாரத்தைக் கண்டால், போகும் வழிக்குத் துணையாகும் என்று அவருக்குத் தோன்றியது. - வேறு இரண்டொரு விதவை உறவினர்களிடம் கூறினார். எல்லோரும் உடனே சென்னைக்குச் சென்று, தசாவதார நாடகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/193&oldid=786984" இலிருந்து மீள்விக்கப்பட்டது