பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 157 அழுது பயன் என்ன என்பது விளங்கவில்லை. அலுக்கும்வரை அழுதேன். அப்புறம் அவரிடம் தலை நீட்டவில்லை. கோடையில் திங்கள்தோறும் 'கிராப்' வெட்டிக்கொள்ள காஞ்சி புரத்திற்கு யாத்திரை போனேன். கல்லூரியில் சேர்ந்த பிறகும் கோடையில் இதே நிலை. கிராப் கூலியோடு பயணப் பணமும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உள்ளூரில் கிராப் வெட்ட ஆள் இல்லாததால் நான் துன்பப்பட்டேன். அதுபோல், உள்ளுரில் பொறியியல் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாமையால் என் தந்தையின் பயிர்த்தொழில் மிகவும் இடர்ப்பட்டது. கவலை இறைப்பும் மோட்டார் இறைப்பும் எங்களூரில் இயற்கையாகக் கிடைக்கும் ஏரிப் பாய்ச்சல் ஒரு போகப் பயிருக்குப் போதும். பாதி வயல்களில் இரண்டாம் போகம் பயிர் இடுவது உண்டு. கவலை இறைப்பை நம்பிப் பயிரிட்டு வருவார்கள். கவலைக்கு வேண்டிய காளைகளை வாலாஜாபாத் வாரச் சந்தையில் வாங்கி வருவார்கள். அக்காலத்தில் கால்நடை மருத்துவம் பரவவில்லை. பசுக்கள், எருதுகள், எருமைகள் திடீர் திடீரெனச் செத்து மடியும். மருந்து கிடையாது. வேண்டுதல் பலிக்காது. எண்ணெய் மோட்டார் வாங்கி வந்து பூட்டி இறைத்தால் இந்தத் தொல்லையும் இழப்பும் இராது என்று பலர் யோசனை சொல்லுவதும் உண்டு. சில ஆண்டுகள் பேச்சிலே ஓடின. கடைசியில் என் தந்தையாரின் மேற்பார்வையில் நடந்த மாமாவின் வயல்களுக்கு ஒரு மோட்டார் வாங்கி வந்தார். சென்னையில் இருந்து வந்த 'நிபுணர் அதைக் கிணற்றில் பொருத்தினார். குழாய்களையும் அவரே இருந்து பொருத்திக் கொடுத்தார்; மோட்டாரை ஓடவைத்துச் சரிபார்த்தார். o அதை ஒட்டும் வித்தை உள்ளூரில் எவருக்கும் தெரியாது. கற்றுக் கொள்ள முன் வருவோரும் இல்லை. எனவே சென்னையிலிருந்து பயிற்சிபெற்ற ஒருவரை அழைத்துவந்தார். தாராளமாகவே சம்பளம் கொடுத்தார்; மாமா வீட்டிலேயே சாப்பாடு. என்னதான் இருந்தாலும் பட்டினம் ஆகுமா நெய்யாடு பாக்கம்? 'பீடி குடிக்க, மறைவாகப் போக வேண்டியிருக்கிறது; பேச்சுத் துணை இல்லை; ஒட்டு ஒட்டென்று எப்படி எவ்வளவு நேரம் கையையும் காலையும் மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பது?" என்று குறைபட்டுக்கொண்டு, டிரைவர், சென்னைக்குப் போய் விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/199&oldid=786990" இலிருந்து மீள்விக்கப்பட்டது