பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவு அலைகள் நான், தேர்ச்சி பெற்றேன்; மதிப்பு எண்ஏடுகளையும் கொடுத்தார்கள். பொதுக்கணக்கில், நூற்றுக்கு எண்பத்தெட்டு மதிப்பெண்களே கிடைத்தன. இதில் ஏமாற்றம். தனிக் கணக்கில் எழுபத்து எட்டு வந்தது. பெளதிகத்தில் எழுபத்தைந்து. மதிப்பெண்கள் கைக்கு வந்ததும், கிறுத்துவக் கல்லூரிக்கு மனுப்போட்டிருந்தவர்களின் மதிப்பெண்களின் பட்டியலைப் பள்ளியிலிருந்தே அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள். அப்பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள எனக்குக் கல்லூரியில் இடம் கிடைப்பது உறுதி; வீடு தேடிச் சேர்க்கைக் கடிதம் வரும் என்று அலுவலகத்தில் கேள்விப்பட்டேன். எங்களுர் அஞ்சல் நிலையமும் கல்லூரி சேர்க்கைக் கடிதமும் அந்த நம்பிக்கையோடு நெய்யாடுபாக்கம் திரும்பினேன். ஆயினும், எனக்கு முந்திய ஆண்டில் தேறிய வாலாஜாபாத் எம்.டி. ராஜ" என்பவர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். மாநிலக் கல்லூரியின் சூழலும் விடுதியின் உணவும் ராஜூவுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவர், தன் அண்ணார் திரு. கன்னிவேலு செட்டியார் மூலம் என்னையும் அக்கல்லூரியிலும் விடுதியிலும் சேரும்படி தூண்டிக் கொண்டு இருந்தார். இதுவா? அதுவா?’ என்ற குழப்பம் எங்களிடம் தலை நீட்டிற்று. 'பிறகு முடிவுசெய்து கொள்வோம். இப்போதைக்கு மாநிலக் கல்லூரிக்கும் விக்டோரியா விடுதிக்கும் மனுப்போட்டு வை. நாலு ரூபாய் போனால் போகட்டும்' என்று என் தந்தை கட்டளையிட்டார். அப்படியே செய்துவிட்டுக் காத்திருந்தேன். அக்காலத்தில் எங்களூரில் அஞ்சல்நிலையம் இல்லை. அடுத்த ஊராகிய காவாந்தண்டலத்தில் இருந்தது. பகுதிநேர அஞ்சல் அலுவலர் வேலை பார்த்தவர் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர். நாள்தோறும் வாலாஜாபாத்திலிருந்து அவர் கால் நடையாகவே அஞ்சல் கட்டைக் கொண்டு வந்து சேர்ப்பார். அவர் வந்து சேர, பகல் பன்னிரண்டு மணி ஆகும். பிற்பகல் காவாந்தண்டலத்திலிருந்து அஞ்சல் கட்டைத் தாக்கிக்கொண்டு வாலாஜாபாத்திற்கு நடந்து செல்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/206&oldid=786998" இலிருந்து மீள்விக்கப்பட்டது