பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 நினைவு அலைகள் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழைபங்காளராகிய காமராசர் முதல் அமைச்சராவார்; சாதி, வருவாய், வேற்றுமை பாராட்டாமல், எல்லோருக்கும் உயர்நிலைப்பள்ளி முடிய 'இலவசக் கல்வி கொடுக்கும் கல்விமடையைத் தாராளமாகத் திறந்து விடுவார். கர்மவீரர்காமராசர் வளர்த்த இலவசக் கல்வியின் நிறைவு விழாவை ஆணையிடும் முதல் அமைச்சராக திரு. மீ. பக்தவத்சலம் விளங்குவார். இப்பெரிய கல்வி வளர்ச்சிக் காதையில் எனக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்று கனவு காணவும் தெரியாது. என்னுடைய சாதகத்தைப் பார்த்த கெட்டிக்காரர்களில் எவரும், ஒய்வு பெறும்போது, தாசில்தார் ஆகியே ஒய்வு பெறுவார். என்பதற்குமேல் சொல்லத் துணியவில்லை. ஏன்? அன்றைய இந்தியப் பட்டிக்காட்டான், தாசில்தார் ஆக எண்ணுவதே பேரவாவாகக் கருதப்படும். அக்காலத்தில் மிக அருமையாக இருந்த இலவசக் கல்வியும் உதவித்தொகையும் கையில் வருவதற்கு முன்பே, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். என் பெற்றோரும் மகிழ்ச்சி கொண்டனர். என் மாமாவும் அவர் அன்னையும் பூரித்தனர். அப்பாவைப் பெற்ற பாட்டனாருக்கு மட்டும், பட்டினத்திற்கு அனுப்பிவிடுகிறோமே என்ற கவலை; 'கெட்டுப்போய் விடுவானோ' என்ற அச்சம். ஆருடக்காரர்கள், என் சீலத்தைப் பற்றி ஊமையாக இருந்து விட்டார்கள் போலும். தேவையில்லாத அச்சமும் கவலையும் பாட்டனாரைப் பற்றின. மீண்டும் சென்னைப் பயணம் சென்னைக் கிறுத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட, என்னை அழைத்துக்கொண்டு, என் தந்தையும் மாமாவும் சென்னைக்குக் கிளம்பினார்கள். விடியற்காலை மூன்று மணிக்கே குளித்துவிட்டு, மூவரும் இரட்டை செய்யாறு, பாலாறு, குண்டுமடுவு, தம்மனுர் மடுவு ஆகியவற்றைக் கடந்து வாலாஜாபாத் புகைவண்டி நிலையத்தை அடைந்தபோது, பொலபொலவென்று பொழுது விடிந்துவிட்டது. எட்டுக் கிலோ மீட்டர் கடந்துவர மூன்று மணியானதைப் பற்றிக் கூடக் குறை தோன்றவில்லை. வழியில் வண்டி குடை சாயாமல் வந்து சேர்ந்த மகிழ்ச்சியோடு சென்னைக்கு இரயில் ஏறினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/208&oldid=787000" இலிருந்து மீள்விக்கப்பட்டது