பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 173 கல்லூரி மாணவனாகப் போகிறேன் என்ற மகிழ்ச்சி ஒரு பால்: பள்ளிப் பருவத்தைப்போல் கல்லூரிப் பருவமும் வாழ்க்கைப் பருவமும் அமைய வேண்டுமென்னும் அவா ஒர்பால் போட்டி யிட்டன, அவ்வேளை. 'இவ்வளவு தூரம் வந்ததுதான் வந்தோம். இதோ நம் எதிரில் இருக்கும் விக்டோரியா மாணவர் விடுதிக்குச் செல்வோம். வடிவேலுக்கு விடுதியில் இடம் கிடைக்குமா என்பதையும் கண்டு கொள்வோம்' என்று என் தந்தை கூறினார். பண்டிதர் அருணிகிரிநாதர் எங்களை அழைத்துக்கொண்டு விடுதிக்குள் நுழைந்தார். அலுவலக அறையைத் தேடிப்போனோம். தலைமை எழுத்தர் திருவேங்கடாச்சாரி, வைதீகக் கோலத்தில் காட்சியளித்தார். எதற்காக வந்தோம் என்பதை அவரிடம் சொன்னோம். 'எல்லாம் துரை விருப்பம். அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ? எனக்கு எப்படித் தெரியும்? 'கல்லூரியில் இடம் கிடைத்ததும் துரையைப் பாருங்கள். இடம் கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சி' என்று தேன் சொட்டப் பேசினார். விடுதிக் காப்பாளரை விடுமுறை நாள்களில் காலையில் பத்து மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் பார்க்கலாம். இதைத் தெரிந்துகொண்டு வந்தோம். இதற்கிடையில் பண்டிதருக்கு ஒரு கருத்து உதித்தது. டாக்டர் சி. நடேசமுதலியாரிடம் பரிந்துரை பெற்றால், என் சேர்க்கை உறுதியாகும் என்று நினைத்தார். அதுவரை, பரிந்துரை வாங்கும் பழக்கம் எங்களுக்குத் தெரியாது. பண்டிதரின் கருத்தை ஏற்றுக் கொண்டோம். திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வாழ்ந்து வந்த டாக்டர் சி. நடேச முதலியாரை அன்றே அணுக முடிவு செய்தோம். ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு டாக்டர் வீட்டிற்குச் சென்றோம். அவருடைய மருத்துவத்தை நாடி வந்த பலர் இருந்தனர். கல்லூரிகளில் சேர்வதற்காகக் கல்லூரி முதல்வர்களுக்குப் பரிந்துரை வாங்க வந்தவர்களும் பலர் உட்கார்ந்திருந்தனர். அண்டி வந்தவர்கள் அனைவருக்கும் மறுக்காது பரிந்துரை வழங்கும் வள்ளலாக டாக்டர் சி. நடேசனார் விளங்கினார். அக்கால ஏழிை நோயாளிகளுக்கு அவரே புகலிடம். மருந்துச் சீட்டோ பரிந்துரைக் கடிதமோ பெற்றுக்கொண்டு போகாதவரே இல்லை. சிலருக்கு மருந்து வாங்கப் பணமும் கொடுத்து அனுப்பினார். இப்படியும் ஒரு டாக்டர் இருந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/215&oldid=787008" இலிருந்து மீள்விக்கப்பட்டது