பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 175 இட்டார். ராயப்பேட்டை முனிவரை நாடு கடத்துகையில் கலவரம் ஏதும் நடந்தால், அதை நேரடியாகச் சமாளிப்பதற்காக உதகமண்டலத் ஒல் இருந்த வெல்லிங்டன் பிரபு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னை முழுவதும் திரு.வி.க. வை நாடு கடத்தப் போகிறார்க ளென்பதே பேச்சு. 'அரசியலில் திரு.வி.க.வுக்கு நேர் எதிர் அணியில் இருந்த சர் தியாகராயச் செட்டியாருக்கு இச்செய்தி எட்டிற்று. வீரமும் அன்பும் பெருந்தன்மையும் திரண்டு உருவானவர் அல்லவாதியாகராயர் வாளா இருப்பாரா? நம் கட்சி வளரவிடாமல் தடுக்கும் இச்சொல்லேருழவர் தொலையட்டும்; அது நம் கட்சிக்கு ஆதாயமாகட்டும் என்று எண்ணி மகிழும் மனம் படைத்த சிறியோரா அவர்? 'நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர், 'திரு.வி.க.வை நாடு ' கடத்தக்கூடாது. நாடு கடத்தினால், நீதிக்கட்சி அமைச்சர்கள் பதவிகளை உதறிவிட்டு வெளியேறி விடுவார்கள் என்று ஆளுநர் வெல்லிங்டனிடம் அழுத்தந்திருத்தமாக எச்சரித்தார். தியாகராயச் செட்டியார் குணம் ஆளுநர் அறிந்தது தானே! காங்கிரசு இயக்க முதலியாரை நாடு கடத்துவது நீதிக்கட்சித் தலைவரின் தலையீட்டால் கைவிடப்பட்டது. "தியாகராயர் மறைவு நமக்குப் பெரும் இழப்பு." மேலே கண்டது, டாக்டர் சி. நடேசனாருக்கும் பண்டித அருணகிரி நாதருக்கும் இடையே அன்று நடந்த உரையாடலின் சுருக்கமாகும். டாக்டர் சி. நடேசனார் டாக்டர் சி. நடேசனார்தான் சென்னையில் திருவல்லிக்கேணியில் முதன்முதல் திராவிடர்சங்கம் நிறுவியவர். அதன் வாயிலாக பார்ப்பனர் அல்லாத மாணவர்களை ஊக்கப்படுத்திக் கல்வியின்பால் நாட்டத்தை ஒருமுகப்படுத்தியவர். ஒருவகையில் இவரை நீதிக்கட்சியின் முன்னோடி எனலாம். டாக்டர் நாயரும் பிட்டி தியாகராயச் செட்டியாரும் இணைந்து நீதிக்கட்சியைத் தொடங்கியபோது இக்கருத்தில் மூத்தவர் யார் என்று தம்மையும் பிறரையும் குழப்பிக் கொண்டிராமல், அக்கட்சியில் இணைந்து வாழ்நாள் முழுவதும் ஆர்வத்தோடு பாடுபட்டார். அத்தகைய பொதுநலப் பெருந் தொண்டரை பெருமகனாரைக் கண்ட பேற்றினை எண்ணும்போ தெல்லாம் உவகை பொங்குகிறது. டாக்டர் சி. நடேசனாரின் ஒரே மகன் கல்லூரி மாணவப் பருவத்தில் திடீரென இயற்கை எய்தினார். பின்னாலே எனக்கு வரப்போகிற துன்பம், அவருக்கு வந்தபோது அதிர்ச்சி அடைந்து கண்ணிர் வடித்த எண்ணற் றோரில் நானும் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/217&oldid=787010" இலிருந்து மீள்விக்கப்பட்டது