பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 நினைவு அலைகள் என் மனப்போராட்டம் உரையாடலுக்குப் பின், எனக்காக ஒர் பரிந்துரைக் கடிதத்தை டாக்டர் நடேசனார் எழுதினார். நாட்டுப்புற இளைஞர்களை அதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, தவறாமல், எனக்கு இடம் கொடுக்க வேண்டுமென்று அழுத்தமாகப் பரிந்துரைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பைசன் என்பவருக்கு எழுதிய அக்கடிதத்தை ஒட்டி, கல்லூரி அலுவலகத்தில் சேர்த்தோம். பிறகு அருணகிரிநாதர் வீட்டிற்கு வந்தோம். 'பரிந்துரை கொண்டுவந்ததைப் பற்றி முதல்வர் வெகுளுவாரோ? அதனால் தானாகக் கிடைக்கக்கூடிய இடம்கூடக் கை தவறிவிடுமோ? தவறிப்போனால் இருக்கவே இருக்கிறது கிறுத்துவக் கல்லூரி இடம்", இப்படி எண்ணி எண்ணி, இரவில் நெடுநேரம் விழித்திருந்தேன். இத்தகைய அனுபவம் புதிது. ஒன்றும் புரியாத நிலை. எப்படியோ இரவு கழிந்தது. o விக்டோரியா விடுதிக் காப்பாளரின் கருணை அடுத்த நாள் காலை, பத்து மணிக்கு முன்பே, விக்டோரியா விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சின்மேல் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தோம். காப்பாளர் அறைக்கு வந்தார்; மணியடித்தார். வெளியே நின்று கொண்டிருந்த ஆள் விரைந்து உள்ளே சென்றார்; அடுத்த நொடி வெளியே வந்தார். எங்களைப் பார்த்து, உள்ளே செல்லும்படி சாடை காட்டினார். நால்வரும் அறைக்குள் சென்றோம். அறையின் நடுவில் சாதாரண நாற்காலியில், பெரிய மேசைக்குப் பின்னால், வழுக்கைத் தலையர் தென்பட்டார். ஆறடிக்கு மேற்பட்ட உயரம்; ஒளிவிடும் கண்கள்; அமைதியான முகம். இவற்றையுடைய ஒரு பெரியவரைக் கண்டோம். வந்த காரணத்தைச் சொன்னோம். 'மாநிலக் கல்லூரியில் சேர்ந்தாயிற்றா? பணம் கட்டியிருந்தால் இரசீது எங்கே?' என்று கேட்டார். இடத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் நிலையைச் சொன்னார், பண்டிதர் அருணகிரிநாதர். பேச்சுக்கிடையில், என் மதிப்பெண்களைக் குறித்திருந்த சீட்டொன்றை அப்பெரியவரிடம் நீட்டினார். இவ்வளவு வாங்கிவனுக்கு இடம் கிடைக்குமாவென்று அவரை மெல்ல கேட்டார். 'இதற்குக் கிடைக்காவிட்டால் எதற்குக் கிடைக்கும்? கல்லூரியில் இடம் கிடைப்பது உறுதி. அதில் சேர்ந்ததும், விடுதிக் காப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/218&oldid=787011" இலிருந்து மீள்விக்கப்பட்டது