பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 177 பணத்தோடு வாருங்கள். விடுதியில் சேர்த்துக் கொள்ளுகிறேன். இவன் வருவான் என்று எதிர்பார்த்து, ஒர் இடம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். என்று கூறியபடியே, என்னைப் பற்றிய தகவல்களை ஒரு குறிப்புச் சுவடியில் எழுதிக்கொண்டார்; எங்களுக்குத் தெம்பு வந்தது. "ஐயா! பையனைப் பாருங்கள் எவ்வளவு சிறிய தோற்றம். இவன் எங்காவது ஒட்டலில் தனியே தங்கிப் படிக்க முடியுமா? சென்னைப் பட்டினத்திற்கே புதிது. விடுதிக் காப்புப் பணம் இப்போது கையில் இருக்கிறது. இதைக் கட்டிவிட்டுப் போகிறோம். இடம் கிடைக்காவிட்டால், திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். 'கிராமத்திற்குத் திரும்பக் கொண்டு போனால் எப்படிச் செலவாகிவிடும் என்று சொல்ல முடியாது. பணம் கரைந்து போனால் படிப்பு பாழாகி விடும். இங்கே இருந்தால், இரும்புப் பெட்டியில் இருப்பதுபோல' என்று அருணகிரிநாதர் கூறினார். காப்பாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான திரு. எஸ். ஈ. அரங்க நாதம் என்னைப் பார்த்தார், சிரித்துக்கொண்டே, "இவன் குழந்தை மாதிரி இருக்கிறான். வெளியில் எங்கும் விட்டு வைப்பது நல்லதல்ல. இவ்விடுதி, கல்லூரிக்கு அருகில் இருப்பதால், பாதுகாப்பாக இருப்பான். க்ாப்புப் பணத்தைக் கட்டிவிட்டுப் போங்கள்' என்று ஆணையிட்டார். அப்படியே செய்தோம், அடுத்து? சூட்டும் கோட்டும் தைத்தோம் துணிக்கடைக்குச் சென்றோம். கல்லூரிக்கு என்ன உடையில் செல்வது? உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றதுபோல், இடுப்பில் வெள்ளை வேட்டியும் உடம்பில் சாதாரண வெள்ளைச் சொக்காயும் அணிந்து போவதா? மேனாட்டு உடையாகிய சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு போவதா? மூடு கோட்டா? திறந்த கோட்டா? திறந்த கோட்டாயின் 'டை கட்டிக்கொள்ள வேண்டுமே? அதைக் கற்றுக்கொள்வது எப்படி? யாரிடம்? கால்களில் பூட்ஸ்' அணிந்ததே இல்லையே! நாள் முழுவதும் கால்களைக் கட்டிப்போட்டுக் கொண்டால் வலிக்காதா? பூட்ஸ் காலோடு நடக்கப் பழக வேண்டாமா? கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தோம்; என்ன முடிவு? மாநிலக் கல்லூரியில் சுதேசி உணர்வு நிரம்பிய சில மாணவர்கள் மட்டுமே கதர் உடையில் - இந்திய உடையில் வருவார்கள். பெரும்பாலோர் மேனாட்டு உடையில் வருவார்கள். இரண்டில் ஒன்றை அணிவது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/219&oldid=787012" இலிருந்து மீள்விக்கப்பட்டது