பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 179 நான் தொப்பி போட்டுக் கொண்டு கல்லூரிக்குப் போவதென்று முடிவு செய்தாலும் உடனடியாகத் தொப்பி வாங்கவில்லை. கல்லூரியில் இடம் கிடைத்த பிறகு, வாங்கிக் கொள்ளலாமென்று நெய்யாடு பாக்கத்திற்குத் திரும்பிவிட்டோம். சில நாள்கள் காத்திருந்தேன். 21. மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ந்தேன் மாநிலக் கல்லூரியில் இடம் கிடைத்தது. சேர்க்கை அட்டை வந்தது. பழையபடி, என் தந்தையும் மாமாவும் என்னை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார்கள். பண்டிதர் அருணகிரிநாதர் எங்களை மாநிலக் கல்லூரிக்கு இட்டுச் சென்றார்; சம்பளத்தைக் கட்டினார். மாநிலக் கல்லூரி என்பது அக்காலத்தில் சாதாரண மக்களுக்கு அநேகமாக எட்டாத இடம். பெரிய வீட்டுப்பிள்ளைகள் கற்குமிடம். பெரிய அதிகாரிகளையும், வழக்குரைஞர்களையும் வளர்க்கும் இடம். அன்றைய மாநிலக் கல்லூரி நான்கு தென்னிந்திய மொழியாளர்கள் கற்கும் கூடமாக விளங்கியது. மேலோர் படித்த அந்த மாநிலக் கல்லூரியில் நாட்டுப்புறச் சூழலில் வளர்ந்த முதல் தலைமுறைப் படிப்பாளியாகிய நான் சேர்ந்தேன். விக்டோரியா விடுதிக்குச் சென்றோம். கல்லூரிச் சேர்க்கை அட்டையையும் சம்பள இரசீதையும் விடுதி அலுவலகத்தில் காட்டினோம்; விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இரண்டாம் மாடியில் இரண்டு பேர்கள் தங்கும் அறையில் எனக்கு இடம் கிடைத்தது. தெலுங்குப் பார்ப்பனர் என்னுடன் இருந்தார். அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை. அவர், தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் இயல்பினர். அவர் கணக்கு (சிறப்பு) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். நான் கணக்கு, பெளதிகம், வேதியியல் ஆகிய மூன்றினை விருப்பப் பாடங்களாக எடுத்திருந்தேன். ஒரே வேளை, அவர், என் கணக்குப் பாடங்களுக்கு உதவி செய்திருக்கிறார். கல்லூரி இடமும் விடுதி இடமும் பெற்ற பிறகு, தைக்கக் கொடுத்திருந்த சூட்டையும் சட்டையையும் வாங்கிக் கொண்டோம். அடுத்து?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/221&oldid=787015" இலிருந்து மீள்விக்கப்பட்டது