பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 187 புண் எங்கே ஏற்பட்டாலும் உடம்பிற்கும் உயிருக்கும் ஊறு அதே போல், அடிமைப்படுதல், எத்துறையில் தொடங்கினாலும் அதோடு கட்டுப்பட்டிராது. எனவே, விடுதலைக் கவிஞர் பாரதியார், உரிமையின் சிறப்பைப் பாடுகையில், 'நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வ ரேனும் பன்னருங் கல்வி கேள்வி படைத்துயர்ந் திட்டா ரேனும் பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள்வேய் பிணத்தோ டொப்பார் என்று பாடினார். இந்திய நாடு பல நூறு அரசுகளாகப் பிரிந்து கிடந்ததால், அவ்வரசுகள், குடிமக்களின் நலத்தைக் கருதாமல் தத்தம் பரப்பையும் அதிகாரத்தையுமே முன்னிலைப் படுத்திக்கொண்டு இருந்ததால், அழுக்காற்றின் உந்துதலால், அடுத்தடுத்துப் போராடி நலிந்ததால், உடன் பிறப்பையும் காட்டிக் கொடுக்க, முதுகில் குத்தக் கூசாத போக்கால், எங்கிருந்தோ, சோப்பையும் சீப்பையும் காட்டிக்கொண்டு அவற்றை விற்க வந்த ஆங்கிலேயருக்கு, நாட்டை இழந்தோம்; ஆட்சியுரிமையை இழந்தோம்; அரசியல் அடிமைத் தனத்தை ஏற்றோம். ஆங்கிலேயர் வந்தது விற்கவே, புதுப்புதுப் பொருள்களை விற்கவே. முடிந்தது எப்படி? அவர்கள் கைகளில் இந்தியாவின் ஆட்சி சிக்கிக்கொண்டது. இன்றைய தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறையினரும் இதிலிருந்து நல்லதோர் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மறவாத பாடத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். அப்பாடம் எது? மற்றவர்களுக்கு வாணிகத்திற்கு இடம் கொடுத்தால் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/229&oldid=787023" இலிருந்து மீள்விக்கப்பட்டது