பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நினைவு அலைகள் முந்தியது பலிக்கவில்லை. நமச்சிவாயரின் நூல்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன. பிந்திய முயற்சி வெற்றிபெறுவதுபோல் தோன்றிற்று. அடுத்த கல்வியாண்டிலிருந்து நமச்சிவாயரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவிப்புக் கொடுத்தார்கள். இச்செய்தி, எப்படியோ மாணவர்களுக்கு எட்டிவிட்டது. திடீர் வேலைநிறுத்தம் நடந்தது. ஆம்; யாரும் தூண்டிவிடாதபோதே, வேலைநிறுத்தம் வெடித்தது. நிர்வாகம் உண்மையை உணர்ந்தது. 'நமச்சிவாயர் இனிய இயல்பினர்; எல்லோரையும் நேசிப்பவர்; எனவே, எல்லாச் சமய, எல்லாச் சாதி மாணவர்களின் நல்லெண்ணத்தையும் அன்பையும் கவர்ந்தவர் என்பது பளிச்சென்று தெரிந்தது. வீண் பெருமை பாராட்டாமல், வேலை நீக்க அறிவிப்பை மாற்றிவிட்டார்கள். தொடர்ந்து பணிபுரியும்படி நமச்சிவாயருக்கு ஆணை கொடுத்தார்கள். கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஆனார் நமச்சி வாயர், அதே பள்ளியில் தொடர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், மேரி இராணிக் கல்லூரிக்குத் தமிழ்ப் பண்டிதர் ஆனார். மேரி இராணிக் கல்லூரி 1914ஆம் ஆண்டு சென்னை மாநில அரசால் தொடங்கப்பட்டது. அதுவரை, சென்னையில் பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி இல்லை. அக்காலத்தில் சென்னை நகரில் நடந்து வந்த மூன்று ஆண்கள் கல்லூரியிலும் பெண்கள் சேருவது அரிது. செல்வர் வீட்டுச் சாற்றில் மிதக்கும் கொத்தமல்லி இலைகளாக மிகச் சிலரே கல்லூரியில் சேர்ந்தனர். பெண்களுக்கென்று தனிக் கல்லூரி தொடங்கினால் ஏராளமான பெண்கள் உயர்கல்வி பெற முன்வரக்கூடும் என்று அரசு கருதிற்று. கல்லூரியைத் தொடங்க முடிவு எடுத்தது. அப்பப்பா இதற்குத்தான் எத்துணை எதிர்ப்பு என்ன சாக்கு? பழக்கம், வழக்கம், மரபு, பண்பாடு என்பவை பழமை விரும்பிகளின் கைகண்ட அம்புகளாகும். பெண்கள் கல்லூரிப் படிப்புப் படிப்பது நம் நெடிய பழக்க வழக்கத்திற்குப் பகை, காலத்தை வென்று வரும் நம் மரபிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/232&oldid=787027" இலிருந்து மீள்விக்கப்பட்டது