பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 191 மாறானது; பாரோர் புகழும் பண்பாட்டினை அழிக்கக் கூடியது, என்று கடுமையான எதிர்ப்புக் கணைகளைத் தொடுத்தார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல நடுங்கினார்கள்; அலறினார்கள்; ஆசிரியர் கடிதங்கள் தீட்டினார்கள். இடம் இல்லாச் சங்கங்களின் சார்பிலும் கண்டனங்கள் கிளம்பின. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? அவர்கள் (ஆங்கிலேயர்) காட்டுமிராண்டிகளாக இருந்தபோதே நாம் நாகரிகத்தின் கொடுமுடியில் இருந்தவர்களாயிற்றே! 'நம் முன்னோர் வகுத்த வழிக்கு மேலாக, இவர்கள் எப்படிச்சிறந்த வழியைக் காட்ட முடியும்? பெண்களுக்குப் படிப்பெதற்கு? 'குடும்பந்தானே கண்கண்ட சொர்க்கம். குடும்பக்கலை கற்கவா கல்லூரிக்குப் போக வேண்டும்? 'பாட்டிக்குத் தெரியாத வீட்டு மருத்துவம் எவருக்குத் தெரியும்? அத்தைக்குத் தெரியாத சமையலா மற்றவர்களுக்குத் தெரியும்? 'அழும் பிள்ளைக்குத் தாலாட்டக் கற்றுக் கொள்ளக் கல்லூரி தேவையா? 'வாழ்க்கைக்கு வேண்டிய இவற்றையெல்லாம் வீட்டிலிருந்து பாட்டியிடம் அத்தையிடம் மூத்தாளிடம் கற்றுக் கொள்வதே நல்லது. கல்லூரிக்குச் செல்வது தேவையற்றது; தீங்கானது; வீணானது: எங்கெங்கோ, என்னென்ன தவறுகளுக்கோ ஆளாக்கக்கூடியது. 'எங்கள் பண்பாட்டிற்குப் பகையான இம்முயற்சி, எங்கள் பண்புள்ளங்களைப் புண்படுத்துவதாகும். 'எங்கள் சமயங்களில், மரபுகளில் தலையிடுவதில்லை என்று மாட்சிமை தங்கிய விக்டோரியாமகாராணியார் வாக்குறுதி அளித்திருப் பதையும் மாநில அரசுக்கு நினைவுபடுத்துகிறோம்.' இப்படி, மேரி இராணிக் கல்லூரியின் தொடக்கத்திற்கு எதிர்ப்புக் கிளம்பின. வைதீகப் பூசாரிகளிடம் இருந்தல்ல. நவீன கல்வி கற்றவர்களிட மிருந்து - பல்கலைக்கழகப் பட்டதாரிகளிடமிருந்து கண்டனங்கள் முழங்கின. இன்றைக்கும் சமூகச் சீர்திருத்தத்திற்கு நம் கோயில் குருக்களைவிட, முற்போக்கு முழங்கிகள் அன்றோ வேர்ப்புழுக்களாக வேலை செய்கிறார்கள்? அது கிடக்கட்டும். திட்டமிட்டபடி மேரி இராணிக் கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னை நகரிலும் தமிழ் கூறும் நல்லுலகிலும் நற்பெயர் பெற்ற பண்டிதர் நமச்சிவாயரை, கல்லூரியின் தமிழ் ஆசிரியராகப் பெறு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/233&oldid=787028" இலிருந்து மீள்விக்கப்பட்டது