பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 193 ஐயங்களைக் கிளப்பினால், எரிச்சல் கொள்ளமாட்டார். குழந் தைக்குச் சொல்லுவதுபோல், மெதுவாகத் தெளிவாக விளக்குவார். சொல்லிலே, கடுமை, கீழ்மை தலை காட்டியதில்லை. 'பூட்ஸ் காலோடு அவர் நடக்கையில் ஒலி எழுப்பி அடுத்துள்ள வகுப்புகளைக் கலைக்கக் கூடாதென்பதற்காக, காலணியின் அடிப்பாகத்தில் இரப்பர் பொருத்தியிருந்தார். யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாத நமச்சிவாயருக்கு நாங்களும் தொந்தரவு கொடுத்ததில்லை. கல்லூரிப் பாட நேரம் ஒரு மணி. ஆனால் நமச்சிவாயரோ அவ்வளவு நேரம் பாடஞ் சொல்வதில்லை. நாற்பத்தைந்து அல்லது ஐம்பது மணித் துளிகளோடு நிறுத்திவிடுவார். இயலாமையால் அல்ல; மடியினால் அல்ல. பின் எதனால்? பல்கலைக்கழகம் குறித்துக் கொடுத்துள்ள பாடங்களோடு முடிந்து விடவில்லை உலக வாழ்வு என்பதை நினைவுபடுத்துவதுபோல் இருந்தது, நமச்சிவாயரின் நடவடிக்கை எப்படி? பாட நேரத்தின் கடைசிப் பத்துப் பதினைந்து மணித்துளிகளைப் பொது அறிவிற்கு ஒதுக்கிவிடுவார். அவராகப் பொதுஅறிவுப் பாடம் நடத்துவாரா? இல்லை. மாணவர்கள் பொதுக் கேள்விகளைக் கேட்கலாம், நமச்சிவாயர் அவற்றிற்குப் பதில் சொல்லுவார். ஒரே ஒரு வரம்பு கட்டிக் கொண்டிருந்தார். அவ்வரம்பு எது? மாநிலக் கல்லூரி, அரசுக் கல்லூரி: அக்காலம் விடுதலைப் போராட்ட காலம். எனவே வகுப்பறையில் அரசியல் பற்றிய கேள்வி பதில்கள் வேண்டாம் என்பது அவ்வரம்பு. அதை மாணவர்களும் மதித்தார்கள். பொதுக்கேள்வி நேரம் சுருக்கமாக இருந்தாலும் சுவையாக இருந்தது. எங்களுக்குப் பல துறைத் தகவல்கள் கிடைத்தன. தமிழ்க் கவிதைகளுக்கு ஒப்பான பிறமொழிக் கவிதைகளைத் தெரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் முடிந்தது. சங்க இலக்கியங்களில் வரும் செடி கொடி மரப் பெயர்களுக்குத் தாவரவியலார் வழங்கும் சொற்களைக் கூடக் கற்றுக் கொள்வோம். ஒருநாள், மாணவர் ஒருவர், நமச்சிவாயரை எரிச்சலூட்ட முயன்றார். பலிக்கவில்லை. மாறாக, பண்டிதரின் பரந்த படிப்பு வெளியாயிற்று. வாழ்க்கை முறை ஒன்று எங்கள் அறிவில் மின்னிற்று. எப்படி? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/235&oldid=787031" இலிருந்து மீள்விக்கப்பட்டது