பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவு அலைகள் திருத்தணிகை வேலனின் பக்தர் நமச்சிவாயரோ, சைவப்பற்றுள்ள தமிழர், மேனாட்டு உடையில் மிடுக்காக வந்தபோதிலும் நெற்றியில் சந்தனப்பொட்டு இன்றி வெளியே செல்லார். அது மட்டுமா? திங்கள் தோறும், தவறாது, கிருத்திகையன்று திருத்தணிகை சென்று, தணிகைவேலனைப் பக்தியுடன் வழிபட்டு வநதவா. தம்முடைய முதல் மகனுக்குத் தணிகைவேல் என்றும், இளைய மகனுக்குத் தணிகைமணியென்றும் பெயர் இட்டு அழைத்து, தணிகையை நாள்தோறும், பலமுறை நினைவுபடுத்திக் கொண்டு இருந்தவர். இயல்பின் வெளிப்பாடோ, வழிபாட்டின் விளைவோ நமச்சிவாயர் பொறுமை மலையாகவே காட்சியளித்து வந்தார். அத்தகைய நல்லவரை, நல்ல பிள்ளை'யாகிய மாணவர் இராமசாமி எரிச்சல் ஊட்ட முயன்றார். சிவபக்தர் முன்பு நாத்தழும்பேறிய நாத்திகத்தைச் சொல்லி அவரைச் சிவக்கச் செய்ய முயன்றார். 'நல்ல பிள்ளை'யின் வம்புக்கிழுக்கும் போக்கு முரண்பாடாகத் தோன்றுகிறதா? இது பருவக்கோளாறு. மாணவப் பருவம் செங்காய்ப் பருவம் கல்லூரி மாணவப் பருவம், குழந்தைப் பருவமுமல்ல; பொறுப்பான முதிர்ந்த பருவமுமல்ல; செங்காயாகத் துடிக்கும் வாலிபப் பருவம். குழந்தைப் பருவத்தில் எளிதாக, விருப்பம்போல் உருவாக்கலாம். முதிர்ந்த பருவத்தில் தெளிவான உருவம் அமைந்து விடுகிறது. செங்காய்ப் பருவமோ, இரண்டுங்கெட்டான் பருவம். அப்பருவத்தில், கருத்தோட்டம் ஆற்றுப்படுகைக்குள் அடங்கி ஓடாது; புதுப்புது ஒடைகளில் புகத்துடிக்கும்; பலவேளை வெற்றியும் பெறும். காட்டாற்று விரைவோடு ஒடும் அப்பருவ சிந்தனைகளைத் தடுக்க முயல்வது அறியாமை; அது பலிக்காது. மிரட்டி உருட்டி, அடக்கி ஒடுக்கி, சிந்தனை உரிமையைப் புதைக்க நினைப்பது வீண் முயற்சி. தடைபோட்டு மடக்க முடியாத இளமைப்பருவ எண்ணங்களை, கண்ட பக்கம் ஓடி அழிக்க, அழிய விடலாமா? ஆகாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/238&oldid=787034" இலிருந்து மீள்விக்கப்பட்டது