பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 201 திரு. இலட்சுமிநாராயணனும் இரண்டொரு பாட்டு, இசையோடு பாடி மகிழ்வித்ததாக நினைவு. திரு. ஆர். சோமசுந்தரம் என்பவரும் இசை ஞானத்தோடு இனி மையாகப் பாடினார். கேட்போர் கூட்டத்தில் ஒருவனாக நான் இருந்தேன். இக்கல்விச் சுற்றுலாவின்போது, எங்கள் ஆசிரியரின் நல்லியல் பினை நன்றாகப் புரிந்துகொண்டோம். கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரங்களில் கண்களாலேயே கண்டிப்பைப் பொழிந்தாலும், சிரிக்க வேண்டிய நேரங்களில் எங்களோடு சேர்ந்து சிரித்தார். உச்சாங்கிளையில் ஏறி நிற்காமல், மாணவர்களோடு தோழமையோடு பழகினார்; பாட்டும் பாடினார். கண்டிப்போடு போட்டியிட்டது அவரது பண்பு கலந்த கனிவு. ஆம். கசப்பு மருந்தைத் தவிர்க்க முடியாத வேளையில் தேனில் குழைத்துக் கொடுப்பதில்லையா? அதைப்போல் இவ்வாசிரியர் கண்டிப்பையும் கணிவையும் குழைத்துக் கொடுத்தார். எங்களை வளர்த்தார்; தானும் வளர்ந்தார். புகழுடன் விளங்கிய வேதியியல் ஆசிரியர் படிப்படியாகப் பதவி உயர்வுபெற்று, அரசினர்க் கல்லூரி முதல்வர் ஆனார். அந்நிலையில் நற்பணியாற்றியபின் அரசிடமிருந்து ஒய்வுபெற்றார். ஆனால், திருச்சி சீதாலட்சுமி பெண்கள் கல்லூரியில் வேதியியல் மேற்பட்ட வகுப்பை உருவாக்குவதற்கு அழைக்கப்பட்டார். அங்குப் பேராசிரியராக இருந்து தம் அனுபவத்தையும் ஆற்றலையும் பயன்படுத்திச் செம்மையாக அமைத்துத் தந்தார். அவருடைய மாணவனாக இருந்த நான், அவருடைய கல்வித் துறையில் அவரினும் மேல் பதவிகள் வகிக்க நேர்ந்தது. பல நிலைகளிலும் வெவ்வேறு கல்லூரிகளில் அவரைக் கண்டு மகிழ்ந்தேன். அவர் என்னிலும் மகிழ்ந்தார்; பொறாமைப்படவில்லை; தன்னிடம் படித்தவன் என்று கூறிக்கொண்டு உரிமை கொண்டாடவுமில்லை: அலட்சியப்படுத்தவும் இல்லை. 'இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்' என்று கூறுகிறது பொதுமறையாம் திருவள்ளுவரின் திருக்குறள். இக் குறளைப் போற்றிப் புகழைச் சேர்த்துக் கொள்ளாவிடினும் அதைப் பின்பற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் பெற்றார் என்னு-ை" வேதியியல் ஆசிரியர் இலட்சுமிநாராயணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/243&oldid=787040" இலிருந்து மீள்விக்கப்பட்டது