பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 2O5 மக்கள் திலகம் மாண்புமிகு முதல் அமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் மனந்திறந்து பெருந்தன்மையோடு கூறியது நினைவிற்கு வந்தது; மெய்சிலிர்த்தது; புல்லரித்தது. நன்றிப் பெருக்கால் என்னையும் அறியாமல் என் தலை தாழ்ந்தது. அக்காலத் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் சிறப்பைப் பாராட்டப் பெரியார் இல்லாவிட்டாலும், காமராஜ் இல்லாவிடினும், அறிஞர் அண்ணா அகன்றுவிட்டாலும், மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் இருக்கிறார். இவர் ஆட்சிக் காலத்திலாவது, மீண்டும் சீருடை இயக்கம் தழைத்து, நாடு முழுவதும் பரவி எல்லோரும் பள்ளிக்குச் செல்லவும், எல்லா நாள்களும் செல்லவும், எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றே தேர்ச்சி பெறவுமான நன்னிலை உருவாகிவிடலாம் என்னும் நம்பிக்கை பொங்கிற்று. தமிழுக்கு அமுதென்று பேர் அதோ யாரையோ பெயர் சொல்லி அழைப்பது காதில் வீழ்ந்தது. சிந்தனை மேடைக்கு வந்தது. கண்கள் மேடைப்படிகளை நோக்கின. வளர்ந்த வாலிபர், கார்வண்ணன், பெருமிதத்தோடு படியேறி வருகிறார். விடுதியிலிருந்து விலகிப் போவோர் சார்பில் வாழ்த்துகள் கூற அவர் வருகிறார் என்று விடுதிக் காப்பாளர் டாக்டர் சரவணன் சொன்னார். பெயர் என்ன என்று வினவினேன். 'காமராஜர்' புனிதர் பெயரல்லவா? ஏழைபங்காளர் பெயரல்லவா? கோடி கோடியைத் திரட்டிச் செலவழித்த போதிலும் ஒரு காசும் தனக்கென்று ஒதுக்கிக் கொள்ளாத சான்றோர் பெயர் அல்லவா? எனவேதான் அப்பெயர் என் காதில் வீழ்ந்தபோது, சிந்தனை வெளியில் சுழன்று கொண்டிருந்த நான், அக்கணத்திலேயே பொத்தென்று கீழே வீழ்ந்தேன் என்பது புலனாயிற்று. மாணவர் காமராஜ், ஒலிபெருக்கியின் முன் நின்றார். தமிழ் மழை பெய்தார். பருவகாலக் குற்றால அருவியெனப் பொழிந்தார். அவர் வெண்கலக் குரல் அவையோரைக் கவர்ந்தது. கம்பன் காட்டிய இரண்டு காட்சிகளை அவையோருக்குக் காடடினாா. கடமை பற்றி, இராமன் முடிசூட்டிக்கொள்ள ஒப்பியதையும் பின்னர்க் கட்டுப்பாட்டைக் காக்கக் கானகம் செல்ல உடன்பட்டதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/247&oldid=787046" இலிருந்து மீள்விக்கப்பட்டது