பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 - நினைவு அலைகள் இருவேறு நிலைகளிலும் முகங்கோணாமல் அன்றலர்ந்த தாமரையாகக் காட்சியளித்ததையும் அழகுபட விரித்துரைத்தார். வாழ்த்துரை அனுமன் வால் போன்று நீளுமோ என்று அஞ்சிய வேளை, இந்நூற்றாண்டிற்குப் பாய்ந்தார். புதுவைக் குயில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின், 'தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று வரும் பாடலை முனை முறியாமல், உணர்ச்சி கெடாமல் பாடிப் பரவசப்படுத்தி முடித்தார். மகிழ்ச்சிக் கடலில் நீந்திய நான் மாணவர் காமராஜ், தமிழைத் தனிப்பாடமாக எடுத்துப் படிக்கிறாரோ என்று ஐயப்பட்டேன். அடுத்து அமர்ந்திருந்த கல்லூரி முதல்வர் திரு. ஜா இராமச்சந்திரனிடம் அதை வெளியிட்டேன். அவ்விளைஞர் பொருளாதார முதுநிலை வகுப்பில் இரண்டாம் ஆண்டில் படிப்பதாக அறிவித்தார். படிப்பது பொருளியல்; பொழிவது தமிழ். - மக்கள் இனத்திடம் மறைந்துகிடக்கும் திறமைகள் பலப்பை அவர்கள் வளர வாய்ப்புகளும் வரம்பற்றன. ஏற்ற 1. (8ة (الإفريقي உருவாகிவிட்டால் ? எங்கெங்குக் கானிலும் ஆற்றலடா என்று தலைநிமிர்ந்து பாடலாம். பொருளாதார மாணவராகிய காமராஜின் கணிரென்ற தமிழ்ப்பேர். ool I ČIT&TT I Г. ўтгfoПТfoГ) oТАР, கவாநதது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விக்டோரியா விடுதி இதே விடுதியில் நான் தங்கியிருந்தபோது, விடுதி விழாக்கவில் எம்மொழி முழங்கும்? ஆங்கிலமே முழங்கும். தமிழ் முழங்காது. அன்று தமிழ் மாணவர்கள் இல்லையா? இருந்தோம். எங்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லையா? இருந்தது. ஆயினும் ஏன் நீறு பூத்த நெருப்பாக இருந்தது? அன்றையச் சூழ்நிலை அப்படி. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்டோரியா மாணவர் விடுதியின் தங்கியிருந்த இளைஞர்கள் யார்? தென்னகத்து நான்கு மொழிகளுக்கும் உரியவர்கள்; தமிழர், தெலுங்கர், கன்னடியர் மலையாளிகள் ஆகிய நான்கு மொழி. காரர்களுமிருந்தார்கள். இரண்டொரு ஒரியா மொழிக்காரர்களும் சில * (II) of மொழிக்காரர்களும் தங்கியிருந்தனர். அன்றைய விக்டோரியாமானவர் விடுதியில் தமிழர் சிறுபான்மையோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/248&oldid=787048" இலிருந்து மீள்விக்கப்பட்டது