பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OB நினைவு அலைகள் - - ஒருவராக விளங்கிய திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசனுடைய பேரனாகிய திரு. பரமேசுவரன். இவர் பட்டம் பெற்ற பின், வேலையை நாடிப் போகவில்லை. பாட்டனாரைப் போலப் பொதுத்தொண்டில் மூழ்கினார். காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்து, தொண்டாற்றி, உரிமை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தில் அமைச்சராக விளங்கினார். அவருடைய அகால மறைவு, பழங்குடி மக்களுக்குப் பேரிழப்பாகும். திரு. பாலசுந்தரம் என்பவர் இன்னொரு ஆதிதிராவிட மாணவர். இவரும் சென்னைவாசி. இவர், பட்டம் பெற்று அரசுப் பணியில் சேர்ந்து, ஐ.ஏ.எஸ். ஆகி, பல பொறுப்புள்ள பதவிகளில் சிறந்து விளங்கி, தமிழ்நாட்டுப் பணியாளர்கள் பொறுக்குக் குழுவில் உறுப்பினராகி ஒய்வு பெற்றார். ஒய்வு பெற்ற சில திங்களில் இவர் மறைந்துவிட்டார். இது கைதுக்கி விடப்பட வேண்டிய பழங்குடி மக்களுக்குப் பேரிடியாகும். திரு. தனசிங் என்பவர் மூன்றாவது ஆதிதிராவிட மாணவர். இவர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அம் மாவட்ட ஆதிதிராவிடர்களுக்குத் தலைவராக நற்பணி ஆற்றியபின், காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக விளங்கிய திரு. முனுசாமிப்பிள்ளைக்கு நெருங்கிய உறவினர் தனசிங். பின்தங்கிய வகுப்பு மாணவர்களும் நூற்றுக்குள் அடங்குவர். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் பின்தள்ளப்பட்டவர் களாயினும் அக்கால மாணவர்கள், அரசின் உதவிப்பணத்தை எதிர்பார்த்துப் படிக்கவில்லை. தங்கள் செலவில் படித்தார்கள். எங்கள் காலத்துக் கல்லூரிப் படிப்பு மேட்டுக் குடிகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமே கிட்டும். இக்காலத்தில் 2 விக்டோரியா விடுதி விழாவின்போது, விடுதிக் காப்பாளரைக் கேட்டேன். * 'எவ்வளவு பேர்கள் அரசின் உதவிப் பணத்தால் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள்?' இது என் கேள்வி. 'நூற்றுக்கு எண்பது பேர்கள் போல உதவிப்பணத்தை நம்பி, இங்கே இருக்கிறார்கள். தங்கள் பணத்தைச் செலவிட்டுத் தங்குபவர்கள் சிலரே. ' அந்த எண்பது பேர்கள், பழங்குடி மக்கள் உதவித் தொகையோ, பின் தள்ளப்பட்டவர்களுக்கான உதவிப் பணமோ பெறுகிறார்கள். எத்தகைய சமூகப் புரட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/250&oldid=787052" இலிருந்து மீள்விக்கப்பட்டது