பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நினைவு அலைகள் பண்ணையார்கள் சண்டைக்குப் பண்ணையாள்கள் அடிபட்டு உதைபட்டு, அவதிப்படும் பழக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் பிறவிநோயாகத் தொடர்கிறது. அது சும்மா இருக்குமா? வேறு நிலைக்கு மாறியும் வெளிப் படுகிறது. எவர் எவர் வாழ்விற்காகவோ இவர்கள் எதிர்காலம் பலியிடப் படுகிறது. கட்சி அரசியல் பண்ணையார்கள் தன்னாட்சி பெற்ற பிறகு நிலப் பண்ணையார்களைக் கட்டுப்படுத்திவிட்டோம். பலரை, கடைநிலை ஊழியர்களின் நிலைக்குத் தள்ளிவிட்டோம். அவர்களுக்குப் பதில் புதிய பண்ணையார்களை வளர்த்துவிட்டோம். அன்று நிலப் பண்ணையார்கள் இட்டது சட்டம்; எவ்வளவு சிறிய குறைக்கும் - குற்றத்திற்கல்ல - பண்ணையாட்களைக் கட்டி வைத்து அடிக்கலாம்; அது எழுதாச் சட்டம்; இதற்குத் துணை, அடிபடுகிறவர் களின் உறவினர்களே! தங்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக, பங்காளிகளைத் துன்பப்படுத்த உடந்தையாக இருந்தார்கள். இன்று? அரசியல் பண்ணையார்கள் ஏராளம். நாளைக்கொரு கட்சி முளைக்கும்; ஆளுக்கொரு கட்சி தோன்றும். அக்கட்சிகளின் பெரியவர்கள் புதிய பண்ணையார்கள். ஒரு நாள் ஒற்றுமையாக இருந்தாலும் அவர்கள் தலைகள் வெடித்துப் போகும். எனவே, உப்புப் புளிக்கு உதவாத சிறு மாறுபாடுகளுக்காகவும் கிளர்ச்சிகள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் வெடிக்கும். வெடித்தால்? # - பெரியவர்கள் நெற்றியில், சந்தனப்பொட்டு அளவுகூட அழுக்குப்படியாது. முள்தைக்கும் அளவு தொல்லையும் வராது. கட்சித் தொண்டர்களே முன்னே தள்ளிவிடப் படுவார்கள். ஊர்வலங்கள், முழக்கங்கள், தடைமீறல், தடியடிகளைத் தாங்குதல் ஆகிய தியாகங்களுக்காக அல்லவா தொண்டர்கள் பிறந்திருக்கிறார்கள்? முந்திய தலைமுறை வரையில், நிலப்பண்ணையாரின் செல்வாக் கிற்காக, பெருமைக்காக, பண்ணையாட்கள் பலியானது போல, இத்தலைமுறையில் அரசியல் கட்சிப் பண்ணையார்களின் செல்வாக்கிற்காக, பெருமைக்காக, தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/256&oldid=787058" இலிருந்து மீள்விக்கப்பட்டது