பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 215 சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலியாகிறார்கள்; படிப்பைப் பாழாக்கிக் கொள்ளுகிறார்கள். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், மாணவர் அணிகளில் உற்சாகத்துடன் முன்னே நின்றவர்கள், மேல் சாதி மாணவர்கள். இன்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். தங்கள் வளர்ச்சியில் கருத்துன்றிக் கற்கிறார்கள். என்று தணியும் அடிமையில் மோகம்! தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கியவர்களும் பிஞ்சிலே பழுக்க வேண்டுமா? அரசியல் கட்சிகளின் அடியாட்களாகச் செயல்பட வேண்டுமா? மேற்படிப்பைக் கோட்டை விடவேண்டுமா? இவர்களைக் காப்பாற்றக் கருதி, அடிமட்டத்திலே கிடந்தவர்களை மேல் மட்டத்திற்கு வரும்படி வழிவிட எண்ணி, அறிஞர் அண்ணா, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே, ஆசிரியர்களையும் மாணவர்களையும் தீவிர அரசியல் ஈடுபாட்டில் தள்ளி விடுவதில்லை என்னும் பெரிய மனித உடன்படிக்கையை, சென்னைச் சட்டமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்வோம் என்று முன்மொழிந்து, ஒருமனதாக ஒப்புக் கொள்ளச் செய்தார். அண்ணா, முதல் அமைச்சரான பிறகு இதை நிறைவேற்றியிருந்தால், 'தமது ஆட்சியின் வசதிக்கு இந்த முறை' என்று உள் எண்ணம் கற்பிக்கக்கூடும். மாணவர்களைக் கிளர்ச்சிக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தபோது, இந்நிலையை உருவாக்கியது, தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சியில் அண்ணா கொண்டிருந்த எல்லையிலா நல்லெண்ணத்தால், இடையில் முறிந்த பத்திய நிலையை மீண்டும் உருவாக்க அறிஞர் அண்ணா விழைந்தார். இதைக் கருத்தில் கொண்டு, கல்வியின்மேல் கருத்தாயிருந்தால் இன்றைய நன்னிலை தொடரும். இப்படி அறுபது ஆண்டு காலத்தை வட்டமிட்டது நினைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/257&oldid=787059" இலிருந்து மீள்விக்கப்பட்டது