பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அரசியலில் சேராதே மாணவர்களும் அரசியலும் மாணவர்கள் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது. இது சந்தர்ப்பவாதமல்ல. ஒரு சாராரின் அடிப்படைக் கொள்கை களில் ஒன்று. இது அச்சத்தில் முளைத்ததல்ல; கோழைத்தனத்தால் முளைத்த கோரையல்ல; தெளிவில் வளர்த்த தென்னை. வீரத்தின் முனைப்பால் விவேகத்தை இழந்துவிடக் கூடாது. 'மாணவர்கள் அரசியலை அறிந்து கொள்வதோடு நிற்பது நல்லது' என்னும் கொள்கை, இந்த அடிப்படையில் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, மாணவப் பருவத்தில் பின்பற்றிய இக்கொள்கை, அவருடைய தலைமைத் தகுதிக்குத் தடையாக நிற்கவில்லை; மாறாகத் துணை நின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஓட்டங்களை, சூழல்களை அவர் மாணவப் பருவத்தே கற்றுத் தெளிந்தார். அத் தெளிவு, மக்கள் இயக்கத்தை எளிதாக நடத்திச் செல்ல அவருக்குத் துணை நின்றது. பிஞ்சிலே பழுப்பதுபோல், மாணவப் பருவத்தே, எவருக்காகிலும் கொடிதுக்கித் திரிந்திருப்பாரேயானால், பேரறிஞராக உருவாகியிருக்க மாட்டார். புறநானூறு போதிக்கும் பாடம் பண்டைத் தமிழ்நாட்டு நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது. போர் முரசு கொட்டிற்று. வீட்டிற்கு ஒருவராக வேல் எடுத்து வேங்கையெனப் புறப்பட்டனர். ஆண் மக்கள், அலை அலையாகப் போர்க்களம் நோக்கிச் சென்றார்கள். கயமை தொன்மையானது. சொல்லத் தகாத பொய்யொன்றைச் சொல்லி வைத்தாள், பொறாமைக்காரி ஒருத்தி. கேட்கத் தகாத சொல்லொன்று தமிழ்த் தாயின் செவியில் வீழ்ந்தது. 'என் மகனா? முதுகில் புண்பட்டு மடிந்தானா? அத்தகைய கோழைக்கா நான் பால் கொடுத்தேன். இது மெய்யாயின் என் மார்பை அறுத்தெறிவேன்' என்று சூளுரைத்துக் கிளம்பினாள் வீரத் தமிழ்த்தாய். போர்க்களத்தில் கண்டது என்ன? மைந்தனின் வீர முடிவு. எந்நிலையில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/258&oldid=787060" இலிருந்து மீள்விக்கப்பட்டது