பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21B நினைவு அலைகள் அதில் எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்பட்டார்? அப் பிர்க்காவில் பதிவான ஆயிரம் வாக்குகளில், தொள்ளாயிரத்துச் சில்லறை வாக்குகள் திரு இராமசாமி முதலியாருக்குப் பதிவாயின. பார்ப்பன வாக்காளர்களில் சிலர், என் தந்தையின் தொடர்பால் ஆற்காடு முதலியாருக்கு வாக்களித்தார்கள். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சர். ஆ. இராமசாமி முதலியாராக, அப் பெரியவரை, பாரிசில் யுனெஸ்கோஅலுவலகத்தில் கான நேர்ந்தது. வணங்கினேன். என் பெயர்ைச் சொல்லி நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 'உன்னையும் தெரியும்; உன் தந்தையையும் தெரியும். நான் சட்டமன்றத் தேர்தலுக்கு மாகறல் தொகுதியில் நின்றபோது உங்கள் உறவினர்களில் ஒருவராகிய திரு பேட்டை முத்துரங்க முதலியார் என்னை எதிர்த்து நின்றார். 'உன் தந்தையும் அவர் உறவினர்களும் போரூர் முதலியார்களும் உறவைவிடக் கொள்கையே பெரிது என்று கருதி என்னையே ஆதரித்தார்கள். 'சாதி உணர்வு கொள்ளாமல் கொள்கை உணர்வோடு செயல்பட்ட அவர்களை எப்படி மறக்க முடியும்? "தந்தை வழி மகன் என்பதும் எனக்குத் தெரியுமே என்று சர். இராமசாமி முதலியார் கூறியபோது, நான் மெய்மறந்து நின்றது வியப்பில்லை. மூன்றாவது பொதுத் தேர்தலில் இராமசாமி முதலியார் தோற்றார். ஆயினும் கால ஓட்டத்தில் உலகம் உவக்கும் உயரத்திற்கு வாழ்க்கையில் உயர்ந்தார். அவ்வளர்ச்சியின் இரகசியத்தை அன்று தெரிந்து கொண்டேன். அது என்ன? நன்றி மறவாமை. நன்றி மறவாமை. மாணவர்களுக்கு அரசியல் கூடாது அக்காலத்தில், மூன்றாவது பொதுத் தேர்தலின்போது, திரு. ஆ. இராமசாமி முதலியார், எங்கள் பக்கத்திற்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தார். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் காவாந்தண்டலம் கிராமத்திற்கு வந்து பேசினார். == அது ஒலிபெருக்கி இல்லாத காலம்; முதலியாரின் ஆங்கிலச் சொற்பொழிவை திரு எஸ்.எஸ். அருணகிரிநாதர் அவர்கள் தமிழாக்கஞ் செய்தார். அக்கூட்டத்திற்குச் சென்று, திரு இராமசாமி முதலியாரின் ஆங்கிலச் சொற்பொழிவைக் கேட்க விரும்பினேன்; தந்தையிடம் கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/260&oldid=787063" இலிருந்து மீள்விக்கப்பட்டது