பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டத்தை ஏற்பாடு செய்தது என் தந்தை. அவருக்கும் முதலியார் மேல் அளவற்ற காதல். சொந்த இரட்டை மாட்டு வண்டியில் காவாந்தண்டலம் சென்று வந்தார். வண்டியில் எனக்கும் இடம் இருந்தது. எனினும் என்தந்தை என்னை அழைத்துப் போக மறுத்துவிட்டார். அப்போது, நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவ்வயதில் தேர்தல் கூட்டத்திற்கு வந்தால் பேச்சுக் கேட்பதில் சுவை அதிகமாகி விடுமென்று என் தந்தை கருதினார். அரசியல் காட்டாற்றில் அவ்வயதில் சிக்கக்கூடாதென்று அஞ்சினார். பேச்சுக் கேட்பதில் சுவைமிகுந்தால், கல்வி பாழாகும் என்று என் தந்தை நினைத்தார். ஆகவே, என்னை வெவ்வேறு அரசியல் கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கத் தூண்டினாலும், தேர்தல் களத்தில் நாட்டஞ் செலுத்தக் கூடாதென்று நெறிப்படுத்தினார். என் தந்தை போதித்த பாடம் என்னைக் கல்லூரியில் சேர்த்தபோது என் தந்தை பின்வரும் அறிவுரையை என்னிடம் கூறினார். 'கன்னிப் பயிருக்குக் கவனம் அதிகம் தேவை. கல்லூரிக் கல்வி நமக்குக் கன்னிப் பயிர். கருத்தைக் கண்ட பக்கம் சிதற விடாதே. படிப்பின்மேல் மட்டும் நாட்டஞ் செலுத்து. = 'வகுப்பில் கற்றுக் கொள்ளாவிட்டால், வெளியில் கற்க முடியாது. உற்றார் யாரும் பட்டம் பெற்றதில்லை; ஆகவே உன் உதவிக்கு வரமுடியாது. o 'விடுதி நண்பர்கள் எப்படியிருப்பார்களோ இன்றைய உலகம் போட்டி நிறைந்த உலகம். 'ஆகவே, நண்பர்கள், தங்கள் தங்கள் படிப்பையே கவனித்தால், குறைபட முடியாது. ஊர்ப் பெருந்தனங்களைவிடப் படிப்பு இப்போதைக்குப் பெரிது. இதை மறக்காதே." தந்தையின் அறிவுரையை மறக்கவில்லை. வகுப்பறையில் உள்ள வரையில் சிந்தையை அடக்கி, பாடத்தின்பால் செலுத்தினேன். எனவே, பாடங்கள், பெரும்பாலும் எளிதில் புரிந்தன. சிலவேளை, வீட்டுப்பணி கொடுப்பார்கள். அதை சிறப்பாகச் சிறப்புக் கணிதத்தைச் செய்யும்போது, எனக்கு உதவி தேவைப்பட்டது: தாராளமாக உதவியும் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/261&oldid=787064" இலிருந்து மீள்விக்கப்பட்டது