பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 221 பலருடைய கிண்டலையும் ஏற்றுக் கொண்ட நான், பலருக்கு மிகவும் வேண்டியவனாகிவிட்டேன். என் நண்பர்களும் அவர்கள் வாழ்க்கையும் விக்டோரியா விடுதியில் ஏற்கெனவே ஓராண்டு தங்கியிருந்த வாலாஜாபாத் எம்.டி. இராஜூவும் அவருடைய வகுப்பு மாணவர் ஓழலூர் சிவசங்கரனும் விரைவில் நண்பர்கள் ஆனார்கள். உதகையிலிருந்து வந்து என் வகுப்பில் சேர்ந்த திரு பி.கே. லிங்காகெளடர் என் நெருங்கிய நண்பரானார். இவர் படிப்பிற்குப் பின்னர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்.ஆனார். நான் கல்வி இயக்குநராகித் தொடக்கப்பள்ளியில் பகல் உணவு, சீருடை ஆகியவற்றைச் செயல்படுத்த முயன்றபோது, எனக்குப் பெருந்துணை புரிந்தார். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தவும் நிறைய உதவினார். அதே உதகையிலிருந்து வந்த என். லிங்கம் என்பவர் விடுதியில் எனக்கு அன்பர் ஆனார். இவருடைய கிராப் எப்போதும் கலையாது. அவ்வளவு அக்கரையோடு சீவுவார். இவர் வழக்கறிஞரானார். உதகை நகராட்சியின் தலைவராக உயர்ந்து நற்பணியாற்றினார். மாவட்ட நூலக ஆணைக்குழுவின் தலைவராகவும் விளங்கி, பொது நூலக வளர்ச்சிக்குத் துணை நின்றார். உதகையில் அரசினர் கலைக் கல்லூரி நிறுவ முன் வந்து துணை நின்றவர்களில் மேற்கூறிய இரு நண்பர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மாணவப் பருவத்தே ஏற்பட்ட நட்பு முப்பது ஆண்டுகளுக்குப்பின் நிறையப் பலன் கொடுத்தது. எனக்கல்ல; நான் மேற்கொண்ட பொதுத் தொண்டிற்கு. கோவையின் பெருந்தொழில் அதிபர்களில் ஒருவராக இன்று விளங்கும் திரு ஆர். வேங்கடசாமி என் வகுப்பு மாணவர். என்னோடு விடுதியில் இருந்தவர். எனக்கு நல்ல நண்பர். அதேபோல் அவருடைய உறவினர் திரு துரைசாமி நாயுடுவும் என் சகமானவர். எனக்கு வேண்டியவர். காந்தியிடம் பற்றுக் கொண்ட மாணவர்கள் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஒ.வி. அளகேசன் என் வகுப்பில் என் பிரிவில் முதல் குரூப்பில் சேர்ந்தார்; இருவரும் விக்டோரியா விடுதியில் இருந்தோம். நெருக்கமான நண்பர்களாக இருந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/263&oldid=787066" இலிருந்து மீள்விக்கப்பட்டது